முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் சட்டமன்ற தேர்தல்: இன்று முதல் நிதீஷ் குமார் பிரசாரம் தொடக்கம்

புதன்கிழமை, 1 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

பாட்னா - பீகார் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்பதில் பாஜ மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். பாஜகவை வீழ்த்த பிரதான கட்சிகளான நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ ஆகிய 4 கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன.

இந்த மெகா கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளராக நிதீஷ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தேர்தல் பிரசார பணிகலை முடுக்கிவிட்டு வருகிறார். அவரது தேர்தல் பிரசார பயணத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. நிதீஷ்குமார் இன்று தேர்தல் பிரசார்ததை அதிகாரப் பூர்வமாகத் தொடங்குகிறார்.

அதோடு வீடு வீடாக் பிரசாரம் என்ற திட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார். இந்த பிரசாரம் பீகார் தேர்தல் களத்தில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராளுமன்றத் தேர்தல் பிரசார யுக்தியை வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர் என்பவர், நிதீஷ் குமாருக்கு இந்த புதிய பிரசார திட்டத்தை வகுத்துக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

புதிய பிரசார திட்டத்தின் படி முதல்வர் நிதீஷ்குமார் பீகார் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரசாரம் செய்ய உள்ளார். இந்த பிரசாரத்தின் போது 1 கோடி வீடுகளுக்கு நேரடியாக சென்று ஓட்டு கேட்க வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. நிதீஷ்குமார் சுமார் 1 லட்சம் வீடுகளுக்கு நேரடியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் 1 கோடி வீடுகளின் கதவைத் தட்டி ஓட்டு கேட்க வேண்டும் என்று பிரசார வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. நிதீஷ்குமாரின் இந்த அதிரடியால் பாஜ வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து