முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் சட்டசபை தேர்தல் நிதிஷ்குமார் வீடு வீடாக பிரசாரம் தொடங்கினார்

வெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

பாட்னா -  பீகாரில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் நிதிஷ்குமார் வீடு வீடாகு சென்று பிரசாரம் செய்ய தொடங்கினார். பீகார் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேரதல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் முதல்வ்ர நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும், லல்லு பிரசாத்யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியும் புதிதாக கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. பாஜ கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து விலகிய முன்னாள முதல்வர் ஜித்தன்ராம் மாஞ்சியின் புதிய கட்சி மத்திய மந்திரி ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த தேர்தலில் பாஜனதாவுடன் கூட்டணி சேர்ந்த நிதிஷ்குமார் ஆட்சியைப் பிடித்தார். கூட்டணி உடைந்த பின்பு இந்த தேர்தல் நடப்பதால் பாஜனதாவை வீழ்த்த நிதிஷ்குமார் புதிய வியூகம் வகுத்து பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

அதன்படி அவர் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்கிறார். அவர் பாட்னா நகரில் வீடு வீடாக சென்றார். 10க்கும் மேற்பட்ட வீடுகளில் சென்று அங்கு வசிக்கும் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். பின்னர் நிதிஷ்குமார் நிருபர்களிடம் பேசும்போது, இன்று(நேற்று) நான் வீடு வீடாக பிரசாரம் தொடங்கி உள்ளேன். இன்று(நேற்று) 10 வீடுகளுக்கு சென்று மக்களை சந்தித்து எனது வருகையை பதிவு செய்து கொண்டேன். முறைப்படி வருகிற 11ம் தேதி இந்தபிரசாரம் மாநிலம் முழுவதும் தொடங்கும். நானும் எனது கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வீடு வீடாக செல்வார்கள், 5 கட்டமாக இந்த பிரசாரம் நடைபெறும். இவ்வாறு 1 கோடி வீடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து