முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டையைக் கிளப்பும் பரபரப்பு காமெடி படம் - கத்துக்குட்டி

சனிக்கிழமை, 4 ஜூலை 2015      சினிமா
Image Unavailable

நரேன் - சூரி நடிப்பில் பட்டையைக் கிளப்பும் பரபரப்பு காமெடி படமாக உருவாகி இருக்கிறது 'கத்துக்குட்டி'. நிலா சாட்சி கிரியேஷன்ஸ் அன்வர் கபீர், ஓன் புரொடக்சன்ஸ் ராம்குமார், முருகன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'கத்துக்குட்டி' படத்தை புதுமுக இயக்குநர் இரா.சரவணன் இயக்கி இருக்கிறார். கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கே ஹீரோயினியாக நடிக்கிறார். 'காதல்' சந்தியா ஒரு பாடலுக்கும் 'சூப்பர் சிங்கர்' அழகேசன் ஒரு பாடலுக்கும் நடனமாடி இருக்கிறார்கள்.  முழு நீள நகைச்சுவைப் படமாக உருவாகி இருக்கும் 'கத்துக்குட்டி' படத்தில், இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் முதன் முறையாக அறிமுகமாகி இருக்கிறார். 45 ஆண்டுகளுக்கும் மேலாகத் தயாரிப்பாளராகவும், தயாரிப்பு நிர்வாகியாகவும் இருக்கும் ஜெயராஜ் 'கத்துக்குட்டி' படத்தில் நரேனின் தந்தையாக நடித்திருக்கிறார். 

படத்தின் மொத்த காட்சிகளையும் தஞ்சாவூர் மாவட்டத்திலேயே படமாக்கி, தஞ்சை மக்களின் வாழ்வியலை அப்படியே கண்முன்னே நிறுத்தி இருக்கிறார் இயக்குநர் இரா.சரவணன். இதுநாள் வரை டெரர் பாத்திரங்களில் மட்டுமே நடித்த நரேன், முதன் முறையாக வயிறு குலுங்க வைக்கும் அளவுக்கு காமெடியில் ரவுண்ட் கட்டியிருக்கிறார். அவருக்குத் துணையாக வரும் சூரி, 'ஜிஞ்சர்' என்கிற பாத்திரத்தில், படம் முழுக்க காமெடி அதகளத்தையே நடத்தி இருக்கிறார். ''இதுவரை நான் பண்ணிய படங்களிலேயே 'கத்துக்குட்டி' தனித்துவம் கொண்டதாக இருக்கும். ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. டப்பிங் பேசிய போதும் அதே மாதிரிதான். சீனைப் பார்த்ததுமே சிரிக்கத் தொடங்கிவிடுவேன்.

அவ்வளவு லைவான காமெடி காட்சிகள் படத்தில் இருக்கின்றன. குறிப்பாக ஒரு பாட்டிக்கும் எனக்கும் நடக்கும் மோதல், தியேட்டரையே தூள் பண்ணிடும் பாருங்க..." என 'கத்துக்குட்டி' படம் குறித்து பெருமிதமாகச் சொல்கிறார் சூரி. விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்தப் படம், அமர்க்களமான காமெடி ப்ளஸ் கிராமிய விருந்தை ரசிகர்களுக்குப் படைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை என்கிறார்கள் படக்குழுவினர்.  நடிப்பு: நரேன், சூரி, ஸ்ருஷ்டி டாங்கே, ஜெயராஜ், ஞானவேல், காதல் சந்தியா, காதல் சரவணன், ராஜா, சித்தன் மோகன், துளசி, மாறன், தேவிப்பிரியா, அற்புதன் விஜய், கசாலி மற்றும் பலர்

 

இயக்கம்: இரா.சரவணன்

ஒளிப்பதிவு: சந்தோஷ் ஸ்ரீராம்

இசை: அருள்தேவ்

படத்தொகுப்பு: ராஜா சேதுபதி

மக்கள் தொடர்பு: நிகில்

பாடல்கள்: சினேகன், இரா.சரவணன், வசந்த் பாலகிருஷ்ணன்

ஆடை வடிவமைப்பு: சிவபாலன்

நடனம்: தம்பி சிவா

சண்டைப் பயிற்சி: பிரகாஷ்

தயாரிப்பு: அன்வர் கபீர், ராம்குமார், முருகன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து