முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய நெடுஞ்சாலைகளில் மரங்கள் கொண்ட பசுமை பாதையாக மாற்ற மத்திய அரசு திட்டம்: நிதின் கட்காரி

சனிக்கிழமை, 4 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - 90,000 கி.மீட்டர் தூர தேசிய நெடுஞ்சாலைகளில் இருபுறமும் மரங்கள் கொண்ட பசுமை பாதையாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் இந்த லட்சிய கொள்கையானது விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் சாலை கட்டமைப்புக்கு செலவிடப்படும் தொகையில் 1 சதவீதம் சாலையோரத்தில் மரக்கன்றுகள் நட செலவிடப்படும் என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

அரசின் இந்த லட்சிய திட்டத்தை நிறைவேற்ற நாடுமுழுவதும் 1000 ஒப்பந்ததாரர்களை உருவாக்க உள்ளதாகவும் கூறிய அவர், தற்பொழுது, சாலை கட்டமைப்புக்காக செலவிடப்படும் தொகையில் 1 சதவீதத்தை மரக்கன்றுகள் நட மற்றும் அதையொட்டிய இதர பணிகளுக்கு செலவிட முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார். ஒப்பந்ததாரர்கள் சொந்த நாற்றுப்பண்ணை வைத்திருப்பவர்களாக இருப்பார்கள்.

அவர்கள் புதிய வகை மரக்கன்றுகளை தேசிய நெடுஞ்சாலையின் இரு பகுதியில் நட்டு அதை பசுமை பகுதியாக மாற்றுவார்கள் என்று கழிவு மேலாண்மை குறித்த கருத்தரங்கில் கலந்த கொண்ட கட்காரி தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், உதாரணமாக சாலை கட்டமைப்பு பணிக்கு ரூ.1 லட்சம் கோடி செலவழிக்கப்பட்டால், ரூ.1000 கோடி மரக்கன்றுகள் நட செலவிடப்படும். அந்தந்த பகுதிகளின் மண்வளத்திற்கு ஏற்றவாறு மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது. அல்போன்ஸா வகை மரங்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் பிரசித்தி பெற்றது. அதனால் அந்த வகை மரங்களை அங்கு நடலாம். அதுபோல் சட்டிஸ்கரில் கிடைக்ககூடிய புளிய மரக் கன்றுகளை அங்கு நடலாம்.

சில இடங்கள் சாலையின் நீளத்திற்கு ஏற்ப ரோஜா செடிகளை நடவும் முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்தார். மரக்கன்றுகள் நடுவதை தவிர, அம்மரங்களை வெட்டா வண்ணம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும். மேலும்மரக்கன்றுகளுக்கான நாற்று நடல் தொடர்பான தொழில்நுட்பத்தை கனடாவிலிருந்து விரைவில் இறக்குமதி செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த புதிய பசுமை கொள்கையானது, பலருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதோடு மட்டுமில்லாமல், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் திட்டமாக இது இருக்கும் என கூறினார். தற்பொழது உலகிலேயே மிக நீண்ட சாலை போக்குவரத்தை கொண்ட நாடுகளில் 2-வது இடத்தில் உள்ளது இந்தியா. இந்திய சாலை போக்குவரத்தின் நீளம் 33 லட்சம் கி.மீட்டர்  ஆகும். இந்த மொத்த சாலை போக்குவரத்தில் 92,851 கி.மீட்டர் தூர தேசிய நெடுஞ்சாலைகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து