முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேதார்நாத் யாத்திரைக்கு உரிய பாதுகாப்பு : உத்தரகண்ட் முதல்வர் உறுதி

செவ்வாய்க்கிழமை, 7 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

டேராடூன்: கேதார்நாத் உள்ளிட்ட 4 கோயில்களுக்கு புனித யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என உத்தரகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் உறுதிபட தெரிவித்துள்ளார். உத்தரகண்டில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு இடங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் புனித யாத்திரை செல்வது வழக்கம். உத்தரகண்டில் கடந்த 2013ம் ஆண்டு இதே ஜூன்-ஜூலை மாதத்தில் கொட்டி தீர்த்த மழை காரணமாக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.

அப்போது ஏற்பட்ட மேகவெடிப்பு எனப்படும் மழை பேரழிவு காரணமாக சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் வீடு வாசல்களை இழந்தனர். ஆயிரக்கணக்கான புனித யாத்திரை சென்ற பக்தர்கள் நடுவழியில் சிக்கி மாயாமானர்கள். இந்த சம்பவம் அப்போது நாடு முழுவதையும் உலுக்கியது. இந்த ஆண்டும் கடந்த சில நாட்களாக உத்தரகண்டில் மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக பாலங்கள், சாலைகள் அரித்து செல்லப்பட்டதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் சுமார் 400க்கும் மேற்பட்ட புனித யாத்திரை சென்ற பக்தர்கள் நடுவழியில் சிக்கி தவித்தனர். அவர்களை பேரிடர் மீட்பு படையினர் உரிய நேரத்திற்கு சென்று மீட்டனர்.

இதையடுத்து ஒரு சில இடங்களில் பத்ரிநாத் யாத்திரை நிறுத்தப்பட்டது. இந்த சூழலில் மாநிலம் முழுவதும் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு உத்தரகண்ட் வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என உத்தரகண்ட் அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து உத்தரகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் கூறுகையில், பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி யாத்ரீகர்கள் உத்தரகண்ட வருகின்றனர். உத்தரகண்ட் வரும் ஒவ்வொரு பக்தர்களின் உயிருக்கும் மாநில அரசு பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. புனித யாத்திரை செல்லும் அனைவருக்கும் இம்முறை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்றார். மேலும் யாத்திரை செல்லும் வழிகளில் சேதமடைந்த பாலங்கள், சாலைகள் ஆகியவற்றை உடனுக்குடன் சரி செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து