முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யாகூப் மேமனை தூக்கிலிடக்கூடாது: ஜனாதிபதிக்கு நீதிபதிகள் தலைவர்கள் கடிதம்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: யாகூப் மேமனை தூக்கிலிடக்கூடாது அவருக்கு மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு நீதிபதிகள், அரசியல் தலைவர்கள்,மற்றும் இயக்குனர்கள்,நடிகர் கள் கையெழுத்திட்டு கருணை மனுவாக கடிதம்அனுப்பி இருக்கிறார்கள். கடந்த 1993ம்ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது.இந்த குண்டு வெடிப்பில் 253பேர் பரிதாபமாக இறந்தனர்.இந்த தொடர் குண்டு வெடிப்புக்கு டைகர் மேமன் முக்கிய நபராக செயல்பட்டார்.அவர் தற்போது பதுங்கியுள்ளார்.

இந்த நிலையில் டைகர் மேமனின் சகோதரர் யாகூப் மேமனை போலீசார் கைது செய்திருக்கிறார்கள் அவருக்கு இந்த மாதம் 30ம் தேதியன்று மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அவரை அன்றைய தினம் து◌ாக்கிலிடுவதற்கு உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. எனது கணவர் நிரபராதி அவருக்கு மரண தண்டனை விதிக்காதீர்கள் என்று யாகூப் மேமனின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார். மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு டைகர் மேமன் தான் காரணம் .இந்த நிலையில் அவரை தூக்கிலிடுவதற்கு பதிலாக அவரது சகோதரருக்கு மரண தண்டனை விதிக்க கூடாது என்று நடிகர் சல்மான்கான் கருத்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில் யாகூப் மேமனை தூக்கிலிடக்கூடாது அவருக்கு மன்னிப்பு அளியுங்கள் .அவரது தண்டனை குறையுங்கள் என்று ஓய்வு பெற்ற நீதிபதிகள்,அரசியல் தலைவர்கள்,திரைப்பட இயக்குனர்கள், சமூக ஆர்வலர்கள். நடிகர்கள் கையெழுத்திட்டு ஒரு கடிதத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு ஒரு கருணை மனுவாக கடிதம்அனுப்பி உள்ளனர்.

யாகூப் மேமனின் கருணை மனுவை பரிசீலனை செய்து அவரது தண்டனை யைகுறையுங்கள் என அவர்கள் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். குற்றம் சாட்டப்பட்டுள்ள யாகூப் மேமனி உச்ச நீதிமன்றத்தில் தனது தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என வேண்டுகோள் மனு தாக்கல் செய்திருந்தார்.அவரது மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததுடன் மரண தண்டனையையும் உறுதிசெய்தது.இதனால் யாகூப் மேமனுக்கு இந்த மாதம் 30ம் தேதியன்று மரணத்தண்டனை விதிக்கப்படும் நிலை உள்ளது.

இந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பனாசந்த்ஜெயின், நீதிபதிபெடி, நீதிபதி சவந்த், நீதிபதி (ஓய்வு)சுரேஷ் நீதிபதி(ஓய்வு) சிவ சுப்பிரமணியன், நீதிபதி (ஓய்வு)பார்கவா நீதிபதி சந்துரு(ஓய்வு) நீதிபதி நாகு மோகன் தாஸ், மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத் மலானி பாஜ தலைவர் சத்ருகன் சின்கா, காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் ஐயர், தேசிய வாத காங்கிரஸ் தலைவர்(என்.சி.பி) மஜீத் மேமன், சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சிபிஐ தலைவர் டி.ராஜா ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் கையெழுத்திட்டு அவர்கள் யாகூப் மேமனுக்கு மரணதண்டனை விதிக்க கூடாது என வலியுறுத்தி இருக்கிறார்கள்.

இந்த வேண்டுகோள் கடிதத்தில் கே.டிஎஸ் துளசி, சிபிஎம் தலைவர்கள் பிரகாஷ் காரத், தீபங்கர் பட்டாச்சார்யா, பிருந்தா காரத் ,கல்வியாளர்கள்,சமூக ஆர்வலர்கள்,திரைப்பட இயக்குனர்கள், நடிகர்கள் மகேஷ் பட், துஷார் காந்தி ஆகியோரும் கையெழுத்திட்டிருக்கிறார்கள். அவர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனு கடிதத்தில் அரசியலமைப்பு சட்டம் விதி 72 ன்  கீழ் யாகூப் மேமனின் தண்டனை ரத்து செய்தல் ,தண்டனையை குறைத்தல் போன்ற அதிகாரம் போன்றவை ஜனாதிபதிக்கு உள்ளன. எனவே அவரது தண்டனையை குறையுங்கள் என வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்கள்.

இந்தியாவில்  மரண தண்டனையை நீக்க வேண்டும் பல தலைவர்களும்  நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் அதற்கான நடவடிக் கைகள் பாராளுமன்றத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட வில்லை என்றும் அந்த தலைவர்கள் அந்த கடிதத்தில் சுட்டி காட்டியிருக்கிறார்கள்.மரண தண்டனையை நீக்கும் நடவடிக் கை எடுக்கப்படாமல் இருப்பது வேதனையை தருகிறது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

மரண தண்டனை விதிக்கப்படுவதை சிபிஎம் கட்சி எப்போதும் எதிர்த்து வருகிறது.யாகூப் மேமன் இந்திய புலனாய்வு  முகமைகளுக்கு பல தகவல்களை அளித்து உதவியுள்ளார்.அவருக்கு மரணத்தண்டனை விதிக்க கூடாது என்று எங்கள் கட்சி வலியுறுத்துகிறது என்று சிபிஎம் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.நடிகர் சல்மான் கான் தனது கருத்தை வெளியிட்ட நேரத்தில் சிபிஎம் கட்சி இவ்வாறு தனது கருத்தை தெரிவித்து இருக்கிறது.மும்பை தொடர் குண்டு வெடிப்பில் உண்மை குற்றவாளி டைகர் மேமன் ,ஆனால்அவரது சகோதரர் யாகூப் மேமனுக்கு மரண தண்டனையை விதிக்க கூடாது என சல்மான் கான் கூறியிருந்தார்.

யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை விதிக்கக்கூடாது என நீதிபதிகள், அரசியல் தலைவர்கள், திரைப்பட இயக்குனர்கள், கல்வியாளர்கள், நடிகர்கள் ஜனாதிபதிக்கு கருணை மனு கடிதம் அனுப்பிய நேரத்தில் பாஜ கட்சி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது எனவே யாகூப் மேமனுக்கு மரண தண்டனை விதிப்பதை அரசியலாக்க வேண்டாம் என எதிர் கட்சிகளுக்கு பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து