முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களவையில் நேற்றும் அமளி : ஒரு நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது

திங்கட்கிழமை, 27 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - பாராளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் துவங்கியது, இதுவரை நடந்த அவைக்கூட்டத்தொடர் எதிர் கட்சியினர் அமளியால் முடங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்றும் மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது.பாராளுமன்ற மழைக்காலகூட்டத்தொடர் இந்த மாதம் ஜூலை21ம் தேதியன்று துவங்கியது. இந்த கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்து பாஜக தலைவர்கள் முறைகேடு செய்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஐ.பி.எல் கிரிக் கெட் போட்டியின்போது அன்னிய செலாவணி முறைகேடு செய்ததாக ஐ.பி.எல்லின் முன்னாள் தலைவர் லலித் மோடி மீது குற்றச்சாட்டு உள்ளது.இதனால் அவர் மீது இந்திய தண்டனை பாயும் நிலை உள்ளது.

இதனால் லலித் மோடி கடந்த 4ஆண்டுகளாகலண்டனில் வசித்து வருகிறார். அவர் போர்ச்சுகல் நாட்டில் உள்ள தனது நோய் வாய்பட்ட மனைவியை பார்ப்பதற்காக பிரிட்டன் பயண ஆவணங்களை எதிர் நோக்கினார்.இந்த நிலையில்இதற்காக அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோரின் உதவியை கேட்டார். அந்த பாஜக தலைவர்களும் உதவியதாக தகவல் வெளியாகின.இதேப்போன்று மத்திய பிரதேசத்தில் உள்ள தொழில் முறை தேர்வு வாரியம்(வியாபம்) அரசு ஊழியர்களை தேர்வு செய்வதற்காக நடத்தும் தேர்வுகளில் முறைகேடு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின. அந்த மாநிலத்தில் பாஜ க முதல்வர் சிவ ராஜ் சிங் சவுகான் உள்ளார்.

எனவே இந்த முறைகேடுகளில் சிக்கியுள்ள பாஜக தலைவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சியினர் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் பாராளுமன்றம் நேற்று கூடிய போதும் எதிர் கட்சியினர் அமளியில் ஈடுபட்டார்கள்.காங்கிரஸ் மற்றும் இடது சாரி கட்சியினர் முறைகேடு செய்த பா.ஜ.க தலைவர்களை பதவியில் இருந்து நீக்குங்கள் என்று அமளியில் ஈடுபட்டார்கள்.மக்களவை கூடியதும் எதிர் கட்சியினர் ஊழல் பாஜக தலைவர்களை நீக்க வேண்டும் என எதிர் கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் அவை மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.கேள்வி நேரம் 25நிமிடம் பாதிக்கப்பட்டது.5வது நாளாக மக்களவையில் எதிர்கட்சியினர்  அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அட்டைகளை கையில் ஏந்தி இருந்தார்கள்.இந்த நிலையில் சபா நாயகர் கேள்வி நேரத்தை துவக்கினார்.

நில மசோதாவை எதிர்த்து திரிணாமுல் காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்தார்கள்,.பாராளுமன்றம் அமளியில் இருந்தபோது பாராளுமன்றத்தின் 8வது நுழைவு வாயிலில் மர்மமான சத்தம் கேட்டது. இதனால் பாராளுமன்ற வளாகம் உஷார் படுத்தப்பட்டது. அந்த சத்தம் மோட்டார் சைக்கிளில் இருந்து வந்தது என்று பின்னல் பாதுகாவலர்கள் விளக்கம் அளித்தனர்.மக்களவையில் காங்கிரசார் தொடர்ந்து எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி சத்தம் போட்டதால் அவர்களை சபா நாயகர் எச்சரித்தார்.காங்கிரசார் மற்றும் சமாஜ் வாதி கட்சியினர் தொடர்ந்து கூச்சல் போட்டதால் மக்களவை மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.மதியம் 3.10மணியளவில் மக்களவை மீண்டும் மாலை 4மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதன் பின்னர் டெல்லி ஐகோர்ட் திருத்த மசோதா அவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.காங்கிரஸ் எம்.பி அதிர் சவுத்ரி அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அட்டையை சபாநாயகரின் இருக் கையில் வைத்தார். அவர் அவையை அவமானப்படுத்தி விட்டார்என சபா நாயகர் எச்சரித்தார். அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பாஜக எம்பிக்கள் வலியுறுத்தினர்.இந்த நிலையில் மாநிலங்களவையிலும் எந்த வித நடவடிக் கைகளும் நடைபெறாமல் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து