முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்லூரிகளில் அதிமுக உறுப்பினர் சேர்ப்பு முகாம் அமைச்சர் கோகுல இந்திரா தொடங்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 4 ஆகஸ்ட் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி வாயிலில் அதிமுக உறுப்பினர் சேர்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் அதிமுகவில் ஆர்வத்துடன் உறுப்பினராக சேர்ந்தனர்.  அதிமுக உறுப்பினர் சேர்ப்பு முகாம், சென்னை காயிதே மில்லத் மகளிர் கல்லூரியில் கடந்த வாரம் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் நேற்று தொடங்கியது.

தென்சென்னை வடக்கு மாவட்ட அதிமுக மாணவர் அணி செயலாளர் செந்தில் வேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை அதிமுக அமைப்பு செயலாளரும் அமைச்சருமான கோகுல இந்திரா தொடங்கி வைத்தார். இந்த உறுப்பினர் சேர்ப்பு முகாமில் ஏராளமான மாணவர்கள் மற்றும் மாணவியர் ஆர்வத்துடன் அதிமுகவில் உறுப்பினர்களாக இணைந்தனர். இந்த சிறப்பு முகாமில் அதிமுக மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏவுமான வி.பி.கலைராஜன், அண்ணாநகர் பகுதி அதிமுக செயலாளர் ஏ.இ.வெங்கடேசன், மாவட்டத்தலைவர் வ.கோதண்டராமன், கவுன்சிலர்கள் அமீர்பாட்ஷா, செல்வி, ஜீவாதீனன், பாசறை மாவட்ட செயலாளர் முரளிகிருஷ்ணபிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்