முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2வது கிரிக்கெட் டெஸ்ட்டில் இலங்கை அணி 3விக்கெட் இழப்புக்கு 140 ரன்

வெள்ளிக்கிழமை, 21 ஆகஸ்ட் 2015      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு - இந்தியாவிற்கு எதிரான 2வது கிரிக் கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில்3விக் கெட் இழப்புக்கு 140ரன் எடுத்தது. இந்தியா-இலங்கை அணிகள் இடையே 2வது கிரிக் கெட் டெஸ்ட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெறுகிறது. முதல் நாள் ஆட்டத்தின் போது 6விக் கெட் இழப்புக்கு 319ரன் எடுத்த இந்திய அணி நேற்று 2வது நாள் ஆட்டத்தைதொடர்ந்து ஆடியது. அந்த அணி 393ரன் குவித்த நிலையில் முதல் இன்னிங்சில் ஆல் அவுட் ஆனது. முதல் டெஸ்ட் போட்டியில் 60ரன் குவித்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விரிதிமான் சகா 56ரன் குவித்தார்.அவரது ஆட்டம் இந்திய வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது.

மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் இந்தியா ஆல் அவுட் ஆனது. இதனைதொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி துவக்கத்திலேயே ஒருவிக் கெட் இழந்திருந்தது. துவக்க ஆட்டக்காரரான திமுத் கருணா ரத்னா ரன் குவிக்காமல் ஆட்டம் இழந்தார்.அவரது விக்கெட்டை உமேஷ் யாதவ் கைப்பற்றினார்.இலங்கை அணி ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் தனது முதல் விக் கெட்டை இழந்திருந்தது. இந்த நிலையில் துவக்க ஆட்டக்காரர் கவுசல் சில்வா 117பந்துகளில் 51ரன் எடுத்தார்.அவர் அமித் மிஸ்ராவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்..இந்த தொடருடன் ஓய்வு பெறும் இலங்கை அணியின் மூத்த வீரர் சங்ககாரா 87பந்துகளை ஆடிய நிலையில் 32ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவர் இந்திய அணியின் ஆப் ஸ்பின்னர் அஸ்வின் ரவிச்சந்திரன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். 2ம்நாள் ஆட்டமுடிவில் இலங்கை வீரர் திரிமானே 28ரன்களும் ஆஞ்சலோ மேத்யூஸ் 19ரன்னும் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்கள்.இந்திய பந்துவீச்சாளர்கள் அஸ்வின்,உமேஷ் யாதவ்,அமித் மிஸ்ரா ஆகியோர் தலா ஒருவிக் கெட் கைப்பற்றினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்