முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தமிழர் பிரச்சினையில் அரசியல் தீர்வு ஏற்படும்: பிரதமர் ரனில் விக்ரமசிங்கே நம்பிக்கை

திங்கட்கிழமை, 24 ஆகஸ்ட் 2015      உலகம்
Image Unavailable

கொழும்பு: இலங்கை தமிழர் பிரச்சினையில் அரசியல் தீர்வு ஏற்படும் என பிரதமர் ரனில் விக்ரமசிங்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த 17ம் தேதி நடந்தபாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து அதன் தலைவர் ரனில்விக்ரமசிங்கே பிரதமராக பதவி ஏற்றார். இலங்கையில் தற்போது தேசிய அரசு அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 4-வது முறையாக பிரதமர் பதவி வகிக்கிறார். இவர் கொழும்பில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: விடுதலைப்புலிகளுடன் ஆன இறுதிகட்ட போர் கடந்த 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் தற்போது தான் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதற்கு பல தடை சுவர்கள் இருந்தன. அவற்றை தகர்க்கப்பட்டுள்ளன. அடுத்தப்படியாக மாகாண கவுன்சிலர்கள் மத்திய அரசு இடையேயான அதிகார பகிர்வு குறித்து கோரிக்கை விடுத்துள்ளன. மாகாண கவுன்சிலுக்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த 2 பிரச்சினைகளையும் முக்கியமானதான எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இவற்றுக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசு அரசியல் ரீதியில் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்