முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்: முதல்வருக்கு சரத்குமார், பிரபு,கமல் நன்றி

புதன்கிழமை, 26 ஆகஸ்ட் 2015      சினிமா
Image Unavailable

சென்னை, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்ட நடிகர் சங்கத்துக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நிலம் ஒதுக்கியிருந்தார்.  நடிகர் திலகம் சிவாஜிக்கு இந்த மணிமண்டபம் புகழ் சேர்க்கும் வகையில் அமையும் என்று நம்புகிறேன்.

பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் சார்பிலும், எனது சார்பிலும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று அறிவித்தார். இதற்காக அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன. சிவாஜியின் மகனும், நடிகருமான பிரபு, நடிகர் சங்கம் சார்பில் சரத்குமார், ராதாரவி, தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட திரையுலகமே முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்சிவாஜி கணேசனுக்கு அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளது பற்றி கேட்டபோது நடிகர் பிரபு கூறியதாவது: 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்ட நடிகர் சங்கத்துக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நிலம் ஒதுக்கியிருந்தார்.
ஆனால் நடிகர் சங்கத்தால் மணிமண்டபம் கட்ட முடியவில்லை. தற்போது அரசே மணிமண்டபம் கட்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருப்பதற்கு நன்றி. அவருடைய இந்த அறிவிப்பு உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும்.எனது அண்ணன் ராம்குமார் மற்றும் எனது குடும்பத்தினர் அனைவரது சார்பாகவும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு நடிகர் பிரபு கூறினார்.நடிகர் சங்க தலைவர் சரத்குமார் முதலமைச்சரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். முதலமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.

நடிகர் விவேக் இன்று போலீஸ் கமிஷனர் அலுவலுக்கு வந்து அக்டோபர் மாதம் மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்தநாளையொட்டி பேரணி நடத்துவது தொடர்பாக போலீஸ் கமிஷனரை சந்தித்து பேசினார். அதன் பின் விவேக் கூறியதாவது: 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அரசு சார்பில் மணிமண்டபம் கட்ட இருப்பதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. . இந்நிலையில் நடிகர் கமலஹாசனும் இந்த அறிவிப்பினை வரவேற்று நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நடிகர் திலகத்தை மரியாதையுடன் நினைவு கோரியதில் அரசு, நடிகர் இனத்திற்கும் தனக்கும் பெருமை சேர்த்துக்கொண்டது. கண்ணும் மனதும் நிறைய, நன்றி. அன்னாரது வாரிசு எனத் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள முற்படும் பல்லாயிரம் பேரில் நானும் ஒருவன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்