முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் வழக்கு: பாக். முன்னாள் பிரதமர் கிலானிக்கு எதிராக பிடிவாரண்ட்

வியாழக்கிழமை, 27 ஆகஸ்ட் 2015      உலகம்
Image Unavailable

கராச்சி - ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாத பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ராஸா கிலானிக்கு அந்நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. யூசுப் ராஸா கிலானி முற்றும் முன்னாள் அமைச்சர் மக்தும் பாஹிம் ஆகிய இருவர் மீதும் 12-க்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன.

இதில் 7 வழக்குளில் மொத்தம் ரூ. 50 கோடி ஊழல் செய்ததாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தானின் ஊழல் தடுப்பு நீதிமன்றம் இந்த விசாரணையை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் கிலானி, பாஹிம் இருவரும் ஆஜராக வேண்டும் என்று பல முறை நீதிமன்றம் சம்மன்கள் அனுப்பியது.ஆனால் இந்த சம்மன்கள் புறக்கணிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கிலானி, பாஹிம் இருவரையும் ஜாமீனில் வெளிவரமுடியாத கைது வாரண்ட்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்