முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில கையக மசோதாவுக்காக மீண்டும் அவசரச்சட்டம் இல்லை பிரதமர் மோடி உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 30 ஆகஸ்ட் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: நில கையக மசோதாவுக்காக மீண்டும் அவசரச்சட்டத்தை கொண்டு வரமாட்டோம்.என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய வானொலி உரையில் தெரிவித்தார். பிரதமர்  நரேந்திர மோடி மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று மான் கி பாத்(மனதின் குரல்) என்ற தலைப்பில் வானொலி மூலம் உரை நிகழ்த்தி வருகிறார்.
நேற்று அவர் பேசிய உரையில் கூறியதாவது,

நில கையகப்படுத்தும் மசோதா தொடர்பாக கொண்டு வரப்பட்ட அவசரச்சட்டம் நாளை(இன்றுடன்)காலாவதி யாகிறதுஆனாலும் இந்த அவசரச்சட்டத்தை புதுப்பிக்க மாட்டோம். அப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறேன். வானொலி மூலம் உங்களிடம் நான் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவருக்கும் ஓணம்  மற்றும்ரக்‌ஷபந்தன் வாழ்த்துக்கள். இந்த நாளில் பெண்களின் பாதுகாப்புக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும். பெண்கள் பயன் பெறும் வகையில் பீமா யோஜனா திட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம்.

ஜன்தன் யோஜனா மூலம் புதிய வங்கி கணக்கு துவங்கப்பட்டதில் ரூ.22ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதனால் 11கோடி மக்கள் பலன் அடைந்துள்ளனர்.  கிராமப்புற வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு விவசாயிகளின் நன்மைக்காக இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது. ஆனால் இது குறித்துதவறான தகவல்கள் பரப்பிவிடப்படுவது துரதிர்ஷ்டம்.

இதனால் ஏற்படும் பிரச்சினைகள் நம்மை பாதிக்கும். விவசாயிகளை பாதிக்கும் வண்ணம் ஒரு போதும் செயல்பட மாட்டோம். விவசாயிகள் நன்மைக்காக 13அம்சங்களைசேர்த்து இருக்கிறோம். இந்த சட்டத்தை நிறைவேற்ற மீண்டும் திருத்தங்கள் செய்ய தயாராக இருக்கிறோம். ஜெய் கிசான், ஜெய் சவான் என்பது எங்களது தாரக மந்திரம் மட்டுமல்ல. அதை பின்பற்றியும் வருகிறோம். கீழ்நிலை அரசு பணியாளர்களுக்கான நேரடித்தேர்வை ரத்து செய்ய வேண்டும். நாட்டில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் கவலை அளிக்கிறது. ஆரோக்கியத்தை  பேண சைக்கிள் பயணம் செய்யுங்கள். டெங்கு காய்ச்சல் தொடர்பாக விழிப்புணர்வு அவசியம்.

நாடு முழுவதும் அனைவருக்கும் வீடு கட்டும்திட்டம் நிறைவேற்றப்படும். இதில் ரூ20லட்சம் கோடியில் 305நகரங்களில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் நிறைவேற்றப்படும். அம்பேத்கர் நினைவிடம் லண்டனில்  அமைக்கப்படும். இவ்வாறு மோடி பேசினார். இந் நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி டெல்லியில் நில கையக மசோதா குறித்து கூறியதாவது, நில கையக மசோதா அவசரச்சட்டத்தை மீண்டும் கொண்டு வரப்போவது இல்லை என பிரதமர் முடிவெடுத்துள்ளார். இது விவசாயிகளின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு. இதன் மூலம் அவர்களுக்கு பெருமளவு நிதி இழப்பு ஏற்படாது என்று நிதியமைச்சர் கூறினார். இந்த அவசரச்சட்டம் காலாவதியானாலும் விவசாயிகளுக்கு நேரிடை நிதிபலன்களை அளிக்கும்13 திருத்த சட்டங்கள் விதிமுறையின் கீழ் கொண்டு வரப்படும்என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்