முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருங்கால சந்ததியினரின் நலனுக்காகவே சிறப்பு அந்தஸ்து கோரிக்கை: சந்திரபாபு நாயுடு

செவ்வாய்க்கிழமை, 1 செப்டம்பர் 2015      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் - ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து என்பது வருங்கால சந்ததியினரின் நலனை கருத்தில் கொண்டே வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாமென சட்டப் பேரவை கூட்டத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார். ஆந்திர சட்டப்பேரவை கூட்டம் திங்கட்கிழமை ஐதராபாத்தில் தொடங்கியது. 5 நாட்கள் நடைபெற உள்ள இக்கூட்டத்தில், மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது, தலைநகருக்காக விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்த கூடாது என்பது போன்ற பல அம்சங்கள் குறித்து விவாதிக்க வேண்டுமென எதிர் கட்சியான ஒய்.எஸ்.ஆர் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை சபாநாயகர் ரத்து செய்தார். ஆந்திர அரசு இவைகுறித்து சபையில் விவாதிப்பதாக கூறி உள்ளதால், எதிர்கட்சியின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.

இதனால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டு இரு முறை அவை தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் இது குறித்து ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு பேசுகையில்: சிறப்பு அந்தஸ்துக்காக யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். மாநில பிரிவினை செய்யும் போது, அப்போது மத்தியில் எதிர்கட்சியாக இருந்த பாஜகதான் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிட வேண்டுமென போராடியது. இதற்கு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இணங்கி, 5 ஆண்டுகள் வரை சிறப்பு அந்தஸ்து வழங்க ஒப்பு கொண்டார். தற்போது பாஜக மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது.

தெலுங்கு தேச கட்சியின் தோழமை கட்சியாக உள்ளது. ஆதலால், மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கட்டாயமாக கிடைக்கும் என நம்புகிறேன். இளைஞர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவையானது. ஆனால் சிலர் இதனை அரசியலாக்குகின்றனர். மாநில பிரிவினை சரிவர நடைபெறாத காரணத்தினால்தான் பல்வேறு சிக்கல்களை நாம் தற்போது எதிர் கொள்ள வேண்டி உள்ளது. இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார். முன்னதாக சிறப்பு அந்தஸ்து வேண்டி தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு பேரவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்