முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பந்த் கலாசாரத்தை ஒழிக்க மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 3 செப்டம்பர் 2015      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா - நாட்டில் பந்த் நடத்தும் கலாசாரத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆவேசமாக தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 10 மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தபடி புதன்கிழமை பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. மேற்கு வங்காள மாநிலத்தில் இடதுசாரி கட்சிகள் இந்த வேலை நிறுத்தத்தை நடத்தின.

இதையொட்டி கொல்கத்தாவில் முதல்வர் மமதா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொழிலாளர் வர்க்கத்தின் கோரிக்கைகளை ஆதரிக்கிறோம். ஆனால் பந்த் கலாசாரம் என்பதை இல்லாமல் தோற்கடிக்க வேண்டும்.மேற்கு வங்கத்தை 34 ஆண்டுகளாக அழித்தவர்கள், இப்போது வளர்ச்சிப்பணிகளையும் அழிக்கிறார்கள்.

இடதுசாரிகள் கும்பகர்ணன் போன்றவர்கள்.6 மாதங்கள் தூங்கி விடுவார்கள். டி.வி. சேனல்களில் தோன்றுவதற்காக ஒரு நாள் விழித்தெழுவார்கள்.வன்முறையையும், பந்த் கலாசாரத்தையும் எங்கள் அரசு எப்போதும் சகித்துக்கொள்ளாது.இவ்வாறு மமதா பானர்ஜி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்