முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பருவ நிலைமாற்றத்தை எதிர்கொள்ள இந்தியா முன்னோடி திட்டம்

வெள்ளிக்கிழமை, 2 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - பருவ நிலை மாற்றத்தை கட்டுபடுத்துவதற்கு இந்தியா முன்னோடி திட்டத்தை  சமர்பித்துள்ளது.கரிம வெளியேற்றத்தை 33-35சதவீதம்கட்டுப்படுத்துவதற்கு இந்தியா இந்த திட்டத்தில் இந்தியா 8அம்சங்களை தெரிவித்துள்ளது. உலக பருவ நிலை மாற்றம் குறித்த மாநாடு இந்த ஆண்டு இறுதியில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டையொட்டி கரிம வெளியேற்றத்தை 33-35சதவீதம் கட்டுப்படுத்துவதற்கு இந்தியா  முன்வந்துள்ளது.

இது தொடர்பான அறிக் கையை இந்திய அரசு சார்பில் ஜெர்மனியில்உள்ள பான் நகரில்பருவ நிலை மாற்றம் குறித்து நடந்த ஐக்கிய நாடுகள் சபை கூடுகையில் இந்தியா அறிக் கையை தாக்கல் செய்தது. 2030ம்ஆண்டு கால கட்டத்தில் மொத்த எரி சக்தி உற்பத்தியில் 40சதவீத சக்தியை புதுப்பிக்க தக்க சக்தி மூலம் பெறுவது என்றும் அப்போது கரிம வெளியேற்றத்தை 33-35சதவீதம் குறைப்பது என்றும்இந்தியா தனது அறிக் கையில் குறிப்பிட்டு இருக்கிறது.

2005ம்ஆண்டு கால கட்டத்தில் இருந்த கரிம கழிவுகளில் இருந்து  33-35சதவீத கரிம கழிவுகளை 2030ம்ஆண்டு கால கட்டத்தில் குறைப்பது என்று இந்தியா திட்டமிட்டுள்ளது. கரிம கழிவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக 38 பக்க அறிக் கையை இந்தியா ஐ.நா பருவநிலைமாற்ற கூடுகையில் சமர்ப்பித்துள்ளது. பருவ நிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக 2015ம்ஆண்டு முதல் 2030 ம்ஆண்டு வரையிலான கால கட்டத்தில் வேளாண்துறை ,வனத்துறை, மீன்வள கட்டமைப்பு, நீர் ஆதாரம் மற்றும் சுற்றுச்சூழல் முறைகளுக்கு 20கோடியே 60லட்சம் அமெரிக்க டாலர் இந்தியாவிற்கு தேவைப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்