முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

12 மாவட்டங்களுக்கு அ.தி.மு.க புதிய நிர்வாகிகள் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 6 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, இதுவரை 33 மாவட்டங்களுக்கு அ தி.மு.க. நிர்வாகிகளை முதலமைச்சரும் அ தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ஏற்கனவே 21 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் அறிவித்திருந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று 12 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் அறிவித்தார்.

அ தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக மொத்தம் 50 மாவட்டங்கள் உள்ளன.

இந்த மாவட்டங்களுக்கு அ தி.மு.க. . நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக 14 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முறைப்படி ஆணையாளர்கள், பொறுப்பாளர்கள் நிறமிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டு தேர்தல்கள் நடைபெற்றன. முறைப்படி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கடந்த 1–ந் தேதி முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை மாவட்ட வாரியாக தினமும் முதலமைச்சர் ஜெயலலிதா வௌியிட்டு வருகிறார்.

1–ந் தேதி அன்று சென்னையில் உள்ள 4 மாவட்டங்களுக்கு அதாவது தென்சென்னை தெற்கு, தென்சென்னை வடக்கு, வடசென்னை தெற்கு, வடசென்னை வடக்கு ஆகிய 4 மாவட்டங்களுக்கு அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் பட்டியலை ஜெயலலிதா வௌியிட்டார்.
பகுதி கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை முதல்வர் வௌியிட்டார்.

இதனை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டமாக பட்டியலை ஜெயலலிதா வௌியிட்டார்.

சென்னை மாவட்டங்களை அடுத்து, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, காஞ்சிபுரம் மேற்கு, காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்தி, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, சேலம் புறநகர், சேலம் மாநகர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு மாநகர், புறநகர், நீலகிரி, திருப்பூர் மாநகர், புறநகர், கோவை மாநகர், புறநகர், திருச்சி மாநகர், புறநகர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 33 மாவட்டங்களுக்கு பகுதி, ஒன்றிய, நகர பேரூராட்சி நிர்வாகிகளை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.

இதுதவிர ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொதுக்குழு உறுப்பினர்களையும் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.

இன்னும் 17 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்பட வேண்டும். நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா தொண்டர்களுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

கழக அமைப்புத் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட நிர்வாகிகள் அனைவரையும் அங்கீகரித்து, இன்று முதல் அவரவர் பொறுப்புகளை ஏற்று பணியாற்றிட அனுமதிக்கப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதுடன், கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் விசுவாசம் கொண்டு சிறப்பான முறையில் பணியாற்றி, கழகத்திற்கு நற்பெயரை ஈட்டித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கழக உடன்பிறப்புகள், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவருக்கும் முழு ஒத்துழைப்பு நல்கி கழகப் பணியாற்றிட வேண்டும்.

இவ்வாறு ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்