முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சச்சின், வார்னே அணிகள் மோதும் ஆல் ஸ்டார்ஸ் சீரிஸ் அடுத்த மாதம் துவக்கம்

புதன்கிழமை, 7 அக்டோபர் 2015      விளையாட்டு
Image Unavailable

வாஷிங்டன் - சச்சின், வார்னே அணிகள் மோதும் ஓய்வுபெற்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கும் ஆல் ஸ்டார்ஸ் சீரிஸ் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்காவில் நடக்கவுள்ளது. இந்த கிரிக்கெட் தொடரில், இரு அணிகள் பங்கேற்கின்றன. சச்சின் தலைமையில், சச்சின்ஸ் பிளாஸ்டர்ஸ் மற்றும் ஷேன் வார்னே தலைமையிலான, வார்னேஸ் வாரியர்ஸ் ஆகியவை அவ்விரு அணிகளுமாகும். இவ்விரு அணிகளிலும் உலகின் முன்னணி வீரர்கள் பலரும் பங்கேற்கிறார்கள்.

  சச்சின் டெண்டுல்கர் இதுபற்றி கூறுகையில்,  ஓய்வு பெற்ற வீரர்களிடம் இன்னும் கிரிக்கெட் பேஷன் இருப்பதை உணர்ந்துள்ளோம். நாங்கள் ஆடும் போட்டிகளில் மைதானம் நிறைவதையும் பார்த்துள்ளோம். எனவே மீண்டும் களமிறங்க முடிவு செய்துள்ளோம். உலகமெங்கும் கிரிக்கெட்டை பரப்புவது எங்கள் நோக்கம். இந்திய சந்தையை குறிவைத்து இப்போட்டி நடக்கவில்லை.

அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் அங்கு வைத்து போட்டியை நடத்துகிறோம் என்றார்.  நியூயார்க் நகரின் சிட்டி ஃபீல்ட், டெக்சாஸ், ஹூஸ்டனிலுள்ள, மினிட் மெய்ட் பார்க், லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள டோட்கர்ஸ் ஸ்டேடியம் ஆகியவற்றில், போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த மைதானங்களில் முறையே, 45 ஆயிரம், 40 ஆயிரம் மற்றும் 56 ஆயிரம் ரசிகர்கள் அமர வசதியுள்ளது.

கிரிக்கெட்டை நேரில் சென்று பார்க்க விரும்புவோர் http://cricketallstars2015.com/index.php என்ற இணையதள முகவரியில் சென்று டிக்கெட்டுகளை புக்கிங் செய்ய முடியும்.  முதல் போட்டி நவம்பர் 7ம் தேதி இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கும், நவம்பர் 11ம் தேதி, இந்திய நேரப்படி மறுநாள் காலை 12.30 மணிக்கும், நவம்பர் 14ம் தேதி இந்திய நேரப்படி மறுநாள் காலை 7.30 மணி தொடங்குகிறது. இப்போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்யும் டிவி சேனல் பற்றி இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. 

இப்போட்டியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள சில சீனியர் வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம் வருமாறு., சச்சின் டெண்டுல்கர், ஷேன் வார்னே, சவுரவ் கங்குலி, லட்சுமணன், அஜித் அகர்கர், ஷான் பொல்லாக், ஜேக் கல்லீஸ், லேன்ஸ் க்ளூசினர், ஜான்டி ரோட்ஸ், ஜெயவர்த்தனே, குமார் சங்ககாரா, முத்தையா முரளீதரன், மேத்யூ ஹைடன், ஸ்வான், கர்ட்னி வால்ஸ், ஆலன் டொனால்ட், பிரைன் லாரா, கர்ட்லி அம்ப்ரோஸ், ஹார்ல் ஹூப்பர், டேனியல் வெட்டோரி, ரிக்கி பாண்டிங், பிராட் ஹாடின், கிளேன் மெக்ராத், மைக்கேல் வான், வாசிம் அக்ரம், மொயின் கான், சோயப் அக்தர், சக்லைன் முஸ்தாக். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்