முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திரதனுஷ் தடுப்பூசி முகாம்: அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 7 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைப்படி, தமிழகம் முழுவதும் 19 மாவட்டங்களில் இந்திரதனுஷ் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தடுப்பூசி வழங்கி முகாமை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசும்போது, முதலமைச்சர் அம்மாவின் ஆணைப்படி, தமிழகத்தில் காசநோய், போலியோ, மஞ்சட்காமாலை, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரனஜண்ணி, தட்டம்மை, நிமோனியா மற்றும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் ஆகியவற்றை முற்றிலும் ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டு போலியோ இல்லாத மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. பிறந்த குழந்தை முதல் 2 வயது குழந்தைகளும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் 100 சதவிகித தடுப்பூசி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரனஜண்ணி, கக்குவான் இருமல், தொண்டை அடைப்பான், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் ஆகிய நோய்களை 100 சதவிகிதம் ஒழித்திட பொது மக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த முகாம்கள் இன்று முதல் 8 நாட்களுக்கு (14–ந்தேதி வரை) தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. தடுப்பூசி போடும் பணியில் 46 ஆயிரம் பேர் ஈடுபடுகிறார்கள். அடுத்த மாதம் (நவம்பர்) 7–ந்தேதி முதல் 14–ந்தேதி வரையும், அடுத்த முகாம் நடைபெறுகிறது. இதன் பின்னர் டிசம்பர் 7–ந்தேதி முதல் 14–ந்தேதி வரை அடுத்த முகாம் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் மருத்துவக்கல்வி இயக்குநர் டாக்டர்.எஸ்.கீதாலட்சுமி, பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் கே.குழந்தைசாமி, குழந்தைகள் நல மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சுந்தரி, பச்சிளம் குழந்தைகள் தவிர சிறப்பு சிகிச்சைப்பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சீனிவாசன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்