முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானாவில் நடந்த பஸ் விபத்தில் 10 பேர் பலி

வியாழக்கிழமை, 8 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

புவனகிரி: தெலுங்கானா மாநிலத்தில் அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் பஸ் ஓட்டுநர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயம் அடைந்தனர். தெலுங்கானா மாநிலம் புவன கிரியில் இருந்து நல்கொண்டாவுக்கு 45 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பஸ் புதனன்று மாலை ராமண்ணாபேட்டை மண்டலம் இந்திரபால நகரம் எனும் இடத்தில், எதிரே வந்த லாரி மீது மோதி விபத் துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ் ஓட்டுநர் மல்லாரெட்டி, நடத்துநர் ராஜேஷ், உட்பட 10 உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர். இவர்களில் 15 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் ஒரு வயது குழந்தை, 5 பெண்கள் அடங்குவர். லேசான காயமடைந்தவர்கள் ராமண்ணா பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாய மடைந்தவர்கள் ஹைதராபாத் காமிநேனி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். லாரி அதிவேகமாக வந்ததுதான் விபத்துக்குக் காரணம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தில் பலியானவர்களுக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், சட்டப்பேரவையில் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்