முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்.15-ல் டெல்லியில் கலாம் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

செவ்வாய்க்கிழமை, 13 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமின் சிலையை டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி வளர்ச்சி மைய தலைமையகத்தில் வரும் 15-ந் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின் 84வது பிறந்த நாளையொட்டி அக்டோபர் 15-ந் தேதியன்று டெல்லியில் உள்ள டி.ஆர்.டி.ஓ. தலைமையகத்தில் கலாமின் மார்பளவு சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். இந்நிகழ்வில் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். 

இந்த மார்பளவு சிலை ஹைதராபாத்தில் உருவாக்கப்பட்டு டெல்லி கொண்டு செல்லப்பட்டுவிட்டது. இந்நிகழ்ச்சியில் கலாமின் உறவினர்களும் கலந்து கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளதாக டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் டெல்லியில் உள்ள அப்துல்கலாமின் இல்லத்தை அறிவுசார் மையமாக்க வேண்டும் என்று கலாமின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

கலாமின் அதிகாரப்பூர்வ இல்லத்தை அருங்காட்சியமாக மாற்ற வேண்டும் என்ற பரிந்துரையை நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் நிராகரித்திருப்பதாக தெரிகிறது. இதனால் கலாமின் டெல்லி இல்லத்தில் உள்ள பொருட்கள் அக்டோபர் 31-ந் தேதிக்கு முன்னதாக ராமேஸ்வரத்துக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது. இதனிடையே அக்டோபர் 15-ந் தேதியன்று மாலை ஹைதராபாத்தில் டி.ஆர்.டி.ஓ வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பங்கேற்க உள்ளார். அந்நிகழ்ச்சியில் டி.ஆர்.டி.ஓ. ஏவுகணை வளாகத்துக்கு அப்துல்கலாம் பெயர் சூட்டப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்