முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊர் ஊராக சென்று மு.க.ஸ்டாலின் கீழ்த்தரமான அரசியல் நடத்துகிறார்: அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா கடுமையாக தாக்கு

செவ்வாய்க்கிழமை, 13 அக்டோபர் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, ஊர் ஊராக சென்று மு.க.ஸ்டாலின் கீழ்த்தரமான அரசியல் நடத்துகிறார் என்று அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா கடுமையாக தாக்கினார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனை திட்டங்கள் என்றென்றும் வெற்றி தரும். 2016 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் அம்மா மகத்தான வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்று தொடர்ந்து முதலமைச்சராக இருப்பது உறுதி என்றும் அவர் கூறினார்.
முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி தென் சென்னை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் இன்று அண்ணாநகர் தொகுதியில் வாகன ஓட்டிகளுக்கு அமைச்சரும், அண்ணாநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.கோகுல இந்திரா விலையில்லா ஹெல்மெட்களை வழங்கி பேசினார்.

தலைக்கவசம் உயிர் கவசம் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜெயலலிதா பேரவை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு விலையில்லா ஹெல்மெட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா உத்தரவுப்படி மாநில பேரவை செயலாளரும் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் இதற்கான ஏற்பாடுகளை தமிழகம் முழுவதும் செய்து வருகிறார்.

தென் சென்னை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் ஒவ்வொரு தொகுதியாக விலையில்லா ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட பேரவை செயலாளர் ஜி.ரவிக்குமார் ஏற்பாடு செய்து வருகிறார்.நேற்று அண்ணாநகர் தொகுதி எம்.எம்.டி.ஏ. காலனியில் 100 பேருக்கு விலையில்லா ஹெல்மெட்களை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா வழங்கி பேசினார்.

அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா பேசியதாவது:–

மக்களுக்கு பயன்தரக்கூடிய பொருட்களை வழங்க வேண்டும் என்பதுதான் அம்மாவின் எண்ணம். எனவேதான் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, கறவை மாடுகள், லேப்டாப் போன்ற எண்ணற்றவைகளை வழங்கி வருகிறார்.இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் மிக அவசியம். எனவே தான் இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த விலையில்லா ஹெல்மெட்களை வழங்க முதலமைச்சர் அம்மா ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி இங்கு ஹெல்மெட் வழங்கப்படுகிறது. இங்கு எங்களுக்கு சால்வைகள் அணிவிப்பவர்கள் அனைவருமே சேர்ந்து இதுபோன்ற பணத்தை மிச்சப்படுத்தி ஹெல்மெட்களை வாங்கி கொடுக்கலாம்.
முதலமைச்சர் அம்மா எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார். யாருடைய சிந்தனையிலும் உதிக்காத திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி வருகிறார். அம்மாவின் திட்டங்கள் செல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு திட்டத்தின் பலன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் போய் இருக்கிறது. எனவேதான் பார்லிமெண்ட் தேர்தலில் அம்மா சாதனைகளை மக்களிடம் சொல்லி வாக்கு கேட்டார். 37 தொகுதிகளில் மகத்தான வெற்றி கண்டார்.
இன்று மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக சுற்றி வருகிறார். ஆட்டோவில் தொங்குகிறார். டான்ஸ் ஆடுகிறார். சைக்கிளில் போகிறார். சிலம்பாட்டம் ஆடுகிறார். தன் அருகே வந்த ஆட்டோ டிரைவரை தள்ளி விடுகிறார். கேவலமான கீழ்தரமான அரசியல் நடத்தி கொண்டிருக்கிறார். அவரது செயல்களை எல்லாம் நகைச்சுவை நடிகருடன் ஒப்பிட்டு வாட்ஸ் அப்பில் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.

நாம் அம்மா செய்த சாதனை சொல்ல முடியும். அவர்களால் அப்படிப்பட்ட சாதனைகளை சொல்ல முடியுமா? அண்ணாநகர் தொகுதியில் ஸ்டாலின் வந்தால், தொகுதி முழுவதும் அம்மாவின் சாதனைகளை பட்டியலிட்டு பேனர் வைக்க வேண்டும்.எத்தனை ஸ்டாலின் வந்தாலும், எத்தனை கட்சிகள் கூட்டணி அமைத்து வந்தாலும் அம்மாவை வீழ்த்த முடியாது. அம்மாவின் பக்கம் மக்கள் சக்தி உள்ளது. அம்மாவின் சாதனைகள் வெல்லும். 2016 சட்டமன்ற தேர்தலில் அம்மா அமோக வெற்றி பெற்று தொடர்ந்து முதலமைச்சராக இருப்பார்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா பேசினார்.

இந்த நிகழ்ச்சிக்கு தென் சென்னை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜி.ரவிக்குமார் தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர் ஏ.இ.வெங்கடேசன் எம்.சி., எஸ்.அமீர்பாட்சா எம்.சி., பி.எல்.ராதாகிருஷ்ணன், வ.சுகுமார்பாபு எம்.சி., கே.முருகன், ஏ.தமீம் அன்சாரி, ஏ.எஸ்.பச்சையப்பன், பா.ரங்கராஜன், பி.செல்வி எம்.சி., கடையன், வசந்தகுமார், கே.குப்பன், கோ.செழியன், நித்தியகுமார், ஐயப்பன், குப்புசாமி, கார்த்திக், நாசர், கே.என்.குணசேகரன், அரவிந்த், அப்பன்ராஜ், தீனன், கே.பெருமாள், கே.புருஷோத்தமன், டி.சசிந்திரபாபு, வீரா, பலராமன், கமலக்கண்ணன், எம்.எஸ்.சீனிவாசன், சரோஜா, சரசு, வள்ளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஹெல்மெட்டில் முகப்பில் ஜெயலலிதா படம், அ தி.மு.க. கொடி பொறிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொருவருக்கும் அமைச்சர் கோகுல இந்திரா ஹெல்மெட்களை வழங்கினார். அதனை அணிந்து ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிளில் மகிழ்ச்சியுடன் அணிவகுத்து சென்றார்கள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்