முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிராவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 23 ஆயிரம் டன் பருப்புகள் பறிமுதல்!

வியாழக்கிழமை, 22 அக்டோபர் 2015      வர்த்தகம்
Image Unavailable

மும்பை - மகாராஷ்டிரா மாநிலத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 160 கோடி ரூபாய் மதிப்புள்ள, 23 ஆயிரம் டன் பருப்புகளை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பருவ மழை குறைவால், பருப்பு வகைகள் அதிகம் உற்பத்தியாகும் மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் முடிவடைந்த வேளாண் பருவத்தில் பருப்பு உற்பத்தியில் 20 லட்சம் டன் குறைந்துள்ளது. இதனை சில வியாபாரிகள் சாதகமாக பயன்படுத்தி, பருப்பை பதுக்கி, செயற்கையான விலையேற்றத்தை உருவாக்கி உள்ளனர்.

இதனால், கடந்த ஓராண்டில், வரலாறு காணாத வகையில் பருப்புகளின் விலையேற்றம் உயர்ந்தது. இதனால், பொதுமக்கள் துவரம் மற்றும் உளுத்தம் பருப்பு, 1 கிலோ, 200 ரூபாய் முதல், 210 ரூபாய்க்கு வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.  இதையடுத்து, ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில், பதுக்கல் பேர்வழிகளிடம் இருந்து 5,800 டன் பருப்பு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக புதன்கிழமை மகாராஷ்டிராவில், 300க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில், வியாபாரிகள் பதுக்கி வைத்திருந்த, 160 கோடி மதிப்புள்ள 23 ஆயிரத்து 340 டன் பருப்பு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்