முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதத்தை முறியடிக்க புதிய உளவாளிகள்: பிரிட்டன் பிரதமர் கேமரூன் தகவல்

செவ்வாய்க்கிழமை, 17 நவம்பர் 2015      உலகம்
Image Unavailable

லண்டன் - ஐ.எஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் 1900 புதிய உளவாளிகளை நியமிக்கவுள்ளதாக பிரிட்டன் பிரதமர் கேமரூன் தெரிவித்துள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பால் உலகின் பல நடுகள் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றன. சமீபத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடத்திய பயங்கரவாத தாக்குதலால் உலக நாடுகள் பலவும் எச்சரிக்கையாக உள்ளன.

இதன் வெளிப்பாடாக ஐ.எஸ். தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இங்கிலாந்து உளவுத் துறையில் கூடுதலாக 1900 உளவாளிகளை பணியமர்த்த இருப்பதாக அந்த நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.  ஜி-20 நாடுகளின் மாநாட்டுக்காக துருக்கி வந்துள்ள டேவிட் கேமரூன் கடந்த ஆறு மாதங்களில் பிரிட்டன் உளவு அமைப்புகள் 7 பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடித்துள்ளன.

இதுவரை தாக்குதல் சதித் திட்டங்கள் அல்-காய்தா பயங்கரவாதிகளால், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மட்டுமே தீட்டப்பட்டு வந்தன. ஆனால் தற்போது ஐ.எஸ். பயங்கரவாதிகளால் அதிகரித்துள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக எங்களது எம்.ஐ.5, எம்.ஐ.6, ஜி.சி.ஹெச்.க்யூ. ஆகிய உளவு அமைப்புகளில் கூடுதலாக 1,900 பேரை பணியமர்த்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்