முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ட்விட்டரில் கெஜ்ரிவாலை பின்தொடர்வோர் எண்ணிக்கை 60 லட்சமாக உயர்வு

வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - ட்விட்டரில் அர்விந்த் கெஜ்ரிவாலை பின் தொடர் வோர் எண்ணிக்கை 60 லட்சத்தை கடந்துள்ளதுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடகப் பிரிவு தலைவர் அங்கித் லால் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ட்விட்டரில் அதிகம் பின்தொடரப்படும் இந்திய அரசியல்வாதிகளில் பிரதமர் மோடிக்கு அடுத்தப்படியாக கெஜ்ரிவால் 2-வது இடத்தை பெற்றுள்ளார்.

ட்விட்டரில் பிரதமர் மோடியை, 1 கோடியே 60 லட்சம் பின்தொடர்கின்றனர். கெஜ்ரிவால் நன்கொடை திரட்ட ட்விட்டரை பயன்படுத்தினார். பின்னர் மக்களுடன் தொடர்பு கொள்ளும் சாதனமாக ட்விட்டரை பயன்படுத்தத் தொடங்கினார். இந்திய அரசியல்வாதிகளில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூரும் அதிக பின்தொடர்வோரை கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்