முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ். மீதான தாக்குதலை இரட்டிப்பாக்க வேண்டும்: ஐ.நா. கவுன்சிலில் தீர்மானம்

ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2015      உலகம்
Image Unavailable

நியூயார்க்: ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான தாக்குதலை இரட்டிப்பாக்கு வதுடன் அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரான்ஸ் கொண்டுவந்த தீர்மானம் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தில், “சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அச்சுறுத்தலாக உருவெடுத் துள்ளது. இதை அனைத்து வழிகளி லும் எதிர்த்துப் போரிட வேண்டும் என்பதை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் ஒருமனதுடன் ஏற்றுக் கொள்கிறது” என கூறப்பட்டுள்ளது.

மேலும் ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளில் வேரூன்றி உள்ள ஐ.எஸ். அமைப்பை அங்கிருந்து விரட்டுவதுடன் மற்ற அனைத்து தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் அனைத்து உறுப்பு நாடுகளும் ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் மிகவும் அதிகாரம் மிக்க அமைப்பான பாதுகாப்பு கவுன்சில், கடந்த 1999-ம் ஆண்டு முதல் இதுவரை தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்காக 13 தீர்மானங்களை நிறைவேற்றி இருந்தது. இது 14-வது தீர்மானம் ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்