முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பலத்த மழையால் உயிரிழந்த மேலும் 5 பேர் குடும்பத்திற்கு ரூ 20 லட்சம் உதவி முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன்கிழமை, 25 நவம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக உயிரிழந்த மேலும் 5 பேர் குடும்பங்களுக்கு ரூ 20 லட்சம் நிவாரண நிதி உதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் வடகிழக்குப்பருவமழையின் காரணமாக 22.11.2015 அன்று ஈரோடு மாவட்டம், பவானி வட்டம்,பி.மேட்டுப்பாளையம் ""அ"" கிராமத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் என்பவரின் மகன்தங்கராஜ்;சென்னை, பட்டாளத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மகன் ராஜி;ஆகியோர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவஇடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம், மேல்விஷாரம் கிராமத்தைச் சேர்ந்தஆஜிபாஷா என்பவரின் மகன் சுவேல் அகமதுஅபீப்பாஷா என்பவரின் மகன்ரகுமான் பாஷா;ஆகிய இருவரும் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர் என்றசெய்தியையும்;ஆம்பூர் வட்டம், கடலைகுளம் கிராமத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவரின் மகள் ஷர்மிளா வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

தமிழ்நாட்டில் சமீபத்தில் பெய்த கன மழையின் காரணமாக பல்வேறுநிகழ்வுகளில் மேற்கண்ட தேதிகளில் உயிரிழந்த இந்த 5 நபர்களின்குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலாநான்கு லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க நான்உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்