முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குறைந்த காற்றழுத்தம் வலுவடைய தொடங்கியது: 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

வியாழக்கிழமை, 26 நவம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஸ்டெல்லா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:– தெற்கு அந்தமான் பகுதியில் நேற்று நிலை கொண்டிருந்த மேல் அடுக்கு சுழற்சியானது நேற்று காலை 8.30 மணியளவில் மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. இது காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது.தற்போது மேற்கு நகர்ந்து தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டு இருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த காற்றழுத்த நிலை பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது.

இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறினால் இன்று (27–ந்தேதி) தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.28 மற்றும் 29–ந்தேதிகளில் (சனி, ஞாயிறு) கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். குறிப்பாக 29–ந்தேதி அன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 12 செ.மீ. முதல் 24 செ.மீ. வரை மிக கனமழை பெய்யக்கூடும்.இவ்வாறு அவர் கூறினார்.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செய்யூரில் 7 செ.மீ., மரக்காணத்தில் 5 செ.மீ., மகாபலிபுரம் 4 செ.மீ. மழை பெய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்