முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் ஆமீர் கானை நாட்டை விட்டு வெளியேற சொல்ல யாருக்கும் உரிமை இல்லை: மம்தா பானர்ஜி

வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2015      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா - நடிகர் ஆமீர் கானை இந்தியாவை விட்டு வெளியேற சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். நாட்டில் நிலவி வரும் சகிப்பின்மை குறித்து நடிகர் ஆமீர் கான் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். ஆமீர் கானின் கருத்துக்கு ஆதரவுபும் எதிர்ப்பும் பெருகிக் கொண்டே உள்ளது. அரசியல் தரப்பில் மட்டுமல்லாது திரைத்துறையினரும் அவர் மீது விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்நிலையில், ஆமீர் கானுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார்.  இது குறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், ஜனநாயக நாட்டில்தான் உணர்ந்ததை கூற ஒருவருக்கு உரிமை உண்டு. ஆமீர் கான், தான் என்ன உணர்ந்தாரோ, அவர் மனைவி என்ன சொன்னாரோ அதை தான் கூறியுள்ளார்.

ஆமீர்கானை இந்தியாவை விட்டு வெளியேறுங்கள், வெளிநாட்டிற்குச் செல்லுங்கள், பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. நாம் எல்லோரும் இந்திய நாட்டின் குடிமக்கள். இந்த நாடு ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. இது நமது தாய்நாடு என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்