முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கீழ்த்தரமான அரசியல் செய்கிறது காங்கிரஸ்: ராஜ்நாத்சிங் கருத்துக்கு சிவசேனா ஆதரவு

சனிக்கிழமை, 28 நவம்பர் 2015      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி - காங்கிரஸ் கட்சி சுயநலத்துக்காக கீழ்த்தரமான அரசியல் நடத்துகிறது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதை சிவசேனா கட்சி ஆதரித்துள்ளது.  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. மக்களவையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, “மதச்சார்பின்மை என்ற வார்த்தை தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சமூகத்தில் பதற்றம் ஏற்படுத்தப்படுகிறது. அந்த வார்த்தை அரசமைப்பு சட்ட முகப்புரையில் முதலில் இடம்பெறவில்லை. சட்டத் திருத்தம் மூலம் கொண்டுவரப்பட்டது. தங்கள் சுயநலத்துக்காக காங்கிரஸ் கட்சி கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடுகிறது” என்று பேசினார். இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் அக்கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இந்நிலையில் ராஜ்நாத் சிங் கருத்துக்கு சிவசேனா கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

இக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் இதுகுறித்து கூறியிருப்பதாவது:  வாக்கு வங்கிக்காகவும் தனது சுயநலத்துக்காகவும் பிரித்தாளும் சூழ்ச்சியை இத்தனை காலம் காங்கிரஸ் செய்து வந்துள்ளது என்பதை தலித் மக்கள் புரிந்து கொண்டுவிட்டனர். சாதி, மதம் போன்றவை நிரந்தரமானவை என்பதை காங்கிரஸ் உறுதி செய்தது. மதச்சார்பின்மை என்ற வார்த்தை தவறாக பயன்படுத்தப்பட்டது.  இந்தியா சுதந்திரமான நாடு என்பதை உறுதி செய்யவே அரசமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், அந்த சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை காங்கிரஸ் கொண்டு வந்து சுயநல அரசியல் நடத்தியது.

ஷாபானு கொலை வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பையே புரட்டிப் போடும் வகையில் அரசமைப்பு சட்டத்தில் காங்கிரஸ் திருத்தம் மேற்கொண்டது. அதனால் நாட்டின் சுதந்திரமே கேள்விக் குறியானது. மதச்சார்பின்மை என்ற வார்த்தைதான் இந்த நாட்டில் அதிகமாக தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முடிவு கட்ட வேண்டும்.  இவ்வாறு சாம்னாவில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்