முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அஸ்வின் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்

திங்கட்கிழமை, 30 நவம்பர் 2015      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது சிறப்பான பந்து வீச்சு மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். பந்துவீச்சு தரவரிசையில் 5-ம் இடத்திலிருந்த அஸ்வின் 2-ம் இடத்துக்கு முன்னேறியதால், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் பாகிஸ்தான் லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா ஆகியோர் 3-ம் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 5-ம் இடத்திற்கு பின்னடைவு கண்டார். பெரிய அளவில் பந்துவீச்சு தரவரிசையில் முன்னேற்றம் கண்டவர் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட், இவர் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆஸ்திரேலிய வெற்றியை உறுதி செய்ததால் 10 இடங்கள் முன்னேறி டாப்-10-ல் நுழைந்தார். 

அமித் மிஸ்ரா 2 இடங்கள் முன்னேறி 31-வது இடத்தில் உள்ளார். பேட்டிங் தரவரிசையில் முதலிடம் வகித்த அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் முதலிடத்தை இழந்தார். முதலிடத்தை ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். 12-ம் இடத்தில் முரளி விஜய் உள்ளார். இந்திய பேட்ஸ்மென்களில் டெஸ்ட் தரவரிசையில் உயர்ந்த தரநிலையில் இருப்பவர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 16-வது இடத்தில் உள்ளார். டாப்-5 ஆல்ரவுண்டர்களில் மிட்செல் ஸ்டார்க் நுழைந்து 5-வது இடத்தில் இருக்கிறார். நியூஸிலாந்தை 2-0 என்று டெஸ்ட் தொடரில் வீழ்த்திய ஆஸ்திரேலியா அணிகள் தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா தற்போது 109 புள்ளிகளுடன் உள்ளது. வெள்ளிக்கிழமையன்று தொடங்கும் 4-வது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுவிட்டால் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 2-வது இடத்துக்கு முன்னேறும். ஆஸ்திரேலியா 3-ம் இடத்துக்கும், பாகிஸ்தான் 4-ம் இடத்துக்கும் செல்லும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்