முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

செவ்வாய்க்கிழமை, 1 டிசம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு நிலைகள் காரணமாக தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வரலாறு காணாத அளவுக்கு பெய்து வருகிறது. கடந்த மாதம் 8-ம் தேதி முதல் பெய்த கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் பாதிக்கப்பட்டனர்.

தீபாவளிக்குப் பிறகு பள்ளி-கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை விடப்பட்டது. கடந்த வாரம் இயல்பு நிலை திரும்பியதையடுத்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 3 தினங்கள் மட்டுமே பள்ளிகள் செயல்பட்டன. அதன்பின்னர் வங்கக்கடலில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலைகள் காரணமாக மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால் பள்ளிகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகை ஆகிய மாவட்டங்களில் இன்றும் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
அதேபோல புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்