முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் கனமழை: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது

செவ்வாய்க்கிழமை, 1 டிசம்பர் 2015      ஆன்மிகம்
Image Unavailable

சித்தூர் - ஆந்திராவில் குறைந்த காற்றழுத்த தாழ்வி நிலை காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது. மேலும் கனமழையால் திருமலையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. திருப்பதியில் சாரலுடன் தொடங்கிய மழை பின்னர் வலுத்தது. திருமலையில் இடைவிடாமல் மழை கொட்டியது. இதனால் ஏழுமலையான் கோவிலைச் சுற்றி குளம்போல் தண்ணீர் தேங்கியது. ஏழுமலையான் கோவில் 2-வது பிரகாரத்தில் வெள்ளம் புகுந்தது. இதனால் பக்தர்கள் தரிசனம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகிறார்கள்.

ஆந்திராவின் சித்தூர், நெல்லூர் மற்றும் கடலோர மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் விடாமல் கனமழை பெய்து வருகிறது. ஸ்ரீகாளஹஸ்தி, சந்திர கிரி மற்றும் திருப்பதியில் உள்ள தாழ்வான பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. திருமலையிலும் மழை விடாமல் பெய்து வருவதால், பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். 2வது மலைப்பாதையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்தும் பாதிப்படைந் துள்ளது. இதற்கிடையில் ஸ்ரீகாளஹஸ்தி அருகே உள்ள காளங்கி அணையில் நீர் வரத்து அதிகரித்ததால் 2 மதகுகள் வழியாக உபரி நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்