முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லை பாதுகாப்பு படை விமான விபத்தில் பலியான வீரர்களுக்கு ராஜ்நாத் அஞ்சலி

புதன்கிழமை, 23 டிசம்பர் 2015      சினிமா
Image Unavailable

புதுடெல்லி,டிச: டெல்லி அருகே நடந்த எல்லை பாதுகாப்பு படை விமான விபத்தில் பலியான வீரர்களின் உடலுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார்.

டெல்லியின் துவாரகா பகுதியில் எல்லை பாதுகாப்புப் படைக்கு சொந்தமான சிறிய ரக விமானம் தொழிழ்நுட்ப கோளாறு காரணமாக விழுந்து வெடித்துச் சிதறியதில் அதிலிருந்த  ராஜேஷ் ஷிவ்ரைன்– விமானி, டி.குமார்– விமானி(துணை கமாண்டன்ட்), ஆர்.பி.யாதவ்–இன்ஸ்பெக்டர், எஸ்.என்.சர்மா, டி.பி. சவுகான், எஸ்.ஏ.சோட்டே லால். ரவீந்திரகுமார், ராவத், பி.பி.பட்,  சுந்தர்சிங் ஆகிய 10 பேரும் பலியாயினர்.  இந்நிலையில் விபத்தில் பலியான எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று அஞ்சலி செலுத்தினார்.

பலியான எல்லை பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த ராஜ்நாத் சிங், அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பலியானவர்களில் இருவர் ஹரியாணாவைச் சேர்ந்தவர்கள், 3 பேர் உ.பி. மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். எஞ்சியவர்களில் ஒருவர் பிஹார் மாநிலத்தையும் தலா ஒருவர் பஞ்சாப் மற்றும் ஒடிசா மாநிலங்களையும் சேர்ந்தவர்களாவர். அவர்களது உடல்களுக்கு மத்திய அரசு சார்பில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அப்பொழுது இறந்த வீரர்களின் உறவினர்கள் ராஜ்நாத் சிங்கை முற்றுகையிட்டதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பலியானவர்கள் குடும்பத்தாருக்கு தலா ரூ.15 லட்சம் எல்லை பாதுகாப்புப் படையின் நிவாரண நிதியாகவும், ரூ.10 லட்சம் அரசு நிவாரண நிதியாகவும் வழங்கப்படும் என எல்லை பாதுகாப்புப் படைத் தலைவர் டி.கே.பதக் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்