முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சங்கம் சார்பில் குருதட்சணை திட்டம்: நாளை தொடக்கம்

வெள்ளிக்கிழமை, 25 டிசம்பர் 2015      சினிமா
Image Unavailable

சென்னை,  நடிகர்கள், நாடக கலைஞர்களுக்கு நல உதவிகள் வழங்கும் வகையில், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் குருதட்சணை திட்டம் நாளை தொடங்குகிறது.

இந்தத் திட்டம் மூலம் சங்க உறுப்பினர்களின் முகவரி, குடும்பம், குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான கல்வி, மருத்துவ உதவிகள், காப்பீடு உள்ளிட்ட தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன.இதற்காக அந்தந்த மாவட்ட நாடக நடிகர் சங்க நிர்வாகிகள், தென்னிந்திய நடிகர் சங்க நியமன செயற்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் நேரடியாகச் சென்று விவரங்களைச் சேகரித்து இணையதளத்தில் பதிவு செய்யப்பட உள்ளது.இந்தப் பணியில் புகைப் படம், விடியோ பதிவு செய்வதற்கு 20 விடியோ கேமராக்களுடன் வேல்ஸ் கல்லூரி விஸ்காம் படிக்கும் மாணவர்களும், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தைச் சேர்ந்த 20 உதவி இயக்குநர்கள் ஈடுபட உள்ளனர். இந்தத் திட்டத்தின் தொடக்க விழா தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் நாளை (டிச.27) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. சங்கத் தலைவர் நாசர், பொதுச் செயலர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பொன்வண்ணன், நடிகர்கள் பிரபு, சத்யராஜ், சிவகுமார், சூர்யா, வடிவேலு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்