முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழுமலையானை தரிசித்த ஜனாதிபதி

சனிக்கிழமை, 26 டிசம்பர் 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி : திருப்பதி ஏழுமலையானை ஜனாதிபதி  பிரணாப் முகர்ஜி தரிசனம் செய்தார்.  ஐதராபாதில் உள்ள ஜனாதிபதி  மாளிகையில் கடந்த ஒரு வாரமாக ஜனாதிபதி  பிரணாப் முகர்ஜி ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை விமானம் மூலம் திருப்பதி வந்த ஜனாதிபதியை ஆந்திர மாநில அமைச்சர்கள், தேவஸ் தான அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர். இவருடன் ஆந்திரா-தெலங்கானா மாநி லங்களின் கவர்னர் நரசிம்மன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரும் உடன் வந்தனர். பின்னர் அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் சாலை மார்க்க மாக திருமலைக்கு சென்றார். அங்கு அவரை தேவஸ்தான அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சற்று நேர ஓய்வு எடுத்த பிரணாப் முகர்ஜி, அதன் பின்னர் சம்பிரதாய உடை அணிந்து ஏழுமலையானை தரிசிக்க சென்றார்.

முதலில் கோயில் குளம் அருகே உள்ள வராக சுவாமியை தரி சித்த பிரணாப், பின்னர் அங்கி ருந்து ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார். முகப்பு கோபுர வாசலில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் அவருக்கு சுவாமி தரிசன ஏற்பாடு கள் செய்யப்பட்டன. பின்னர் ரங்க நாயக மண்டபத்தில் தீர்த்த பிர சாதங்களும் சுவாமியின் நினைவு படங்களும் வழங்கி கவுரவிக்கப் பட்டது. இதனை தொடர்ந்து அவர் திருமலையில் இருந்து மீண்டும் திருப்பதி விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்