முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதிக்கு வைகோ காட்டமான கேள்வி

வெள்ளிக்கிழமை, 1 ஜனவரி 2016      அரசியல்
Image Unavailable

சென்னை - திமுகவை ரவுடிக்கட்சி என்று விமர்சித்த பிறகும் விஜயகாந்த்தை கூட்டணிக்கு அழைப்பது தான் கருணாநிதியின் சுயமரியாதையா என்று மதிமுக பொதுசெயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். மதிமுக பொதுசெயலாளர் வைகோ சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல் படுத்துவோம் என்று கருணாநிதி கூறியிருக்கிறார். 1996 ஆம் ஆண்டிலேயே இப்படி கூறியவர் தான் கருணாநிதி ஆனால் அடுத்தடுத்து பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்தும் அதற்காக ஒரு துரும்பையும் அசைக்கவில்லை.. திமுக பினாமிகள் பெயரில் மதுபான ஆலைகளில் இருந்து மதுபான வகைகளை விலைக்கு வாங்கினார்கள். மீத்தேன் வாயுக்காக கையெழுத்து போட்டவர் அன்றைய துணை முதல்வர் ஸ்டாலின்.

அவர் எதற்காக கையெழுத்து போட்டார் அதற்கு பின்னணியில் நடந்தது என்ன என்பது குறித்து விளக்க வேண்டும். நான்கு கட்சித்தலைவர்கள் விஜயகாந்த்தை காலையில் சந்தித்ததும் மாலையில் கருணாநிதி அவருக்கு அழைப்பு விடுக்கிறார். திமுக ஒரு ரவுடிக்கட்சி என்று விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா கடுமையாக விமர்சனம் செய்தபிறகும் ., விஜயகாந்த்தை கூட்டணிக்கு அழைப்பது தான் திமுகவின் சுயமரியாதையாஎன்று கருணாநிதி விளக்க வேண்டும். பாஜ தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து தந்து  1 லட்சம் கோடியை அள்ளிக்கொடுத்த மத்திய அரசு  தமிழக வெள்ள நிவாரணத்திற்கு ரூ  2000 கோடியை மட்டும் தான் வழங்கியது..

காவிரியின் குறுக்கே அணை கட்டும் விவகாரத்திலும் தமி்ழகத்திற்கு பச்சை துரோகத்தை தான் பாஜ செய்தது. எனவே திராவிட பூமியாம் தமிழகத்தில் பாஜ தலை தூக்க முடியாது. ஐக்கிய முன்னணி ஆட்சியில் தான் காளைமாட்டை காட்சிப்படுத்தக்கூடாது என்று ஜல்லிக்கட்டுக்கு எதிராக சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனை எதிர்த்து திமுக வாய்திறக்கவில்லை. இப்போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பொங்கல் பண்டிகைக்குள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்..

  இந்த ஆண்டு பொங்கலுக்குள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இந்த தடை நீடிக்கப்பட்டால் கண்டிக்கத்தக்கது.  இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது விஜயகாந்த் சென்னையில் அளித்த பத்திரிகையாளர் பேட்டியின்போது, அநாகரீகமாக முறையில் நடந்திருப்பது குறித்து நிருபர்கள் கேட்டபோது, விஜயகாந்த் அவ்வாறு நடந்திருப்பதை தவிர்த்திருக்க வேண்டும், என்று வைகோ தெரிவித்தார். பேட்டியின் போது மதிமுகவின் துணைப்பொதுசெயலாளர் மல்லை சத்யா உடனிருந்தார்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்