முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ட்விட்டரில் நடிகர் அமிதாப் பச்சனை தொடர்வோர் எண்ணிக்கை உயர்வு

வெள்ளிக்கிழமை, 22 ஜனவரி 2016      சினிமா
Image Unavailable

புதுடெல்லி - சமூக வலைதளமான ட்விட்டரில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை தொடர்வோர் எண்ணிக்கை ஒருகோடியே 90 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு ட்விட்டரில் இணைந்த அமிதாப் பச்சன் (73) தனது வாழ்க்கையின் முக்கிய தருணங்களையும், நாட்டு நடப்புகள் தொடர்பான தனது கருத்துகளையும் தனது ஃபாலோவர்சுடன் பகிர்ந்து வருகிறார். அவ்வகையில், இதுவரை சுமார் 47,500 பதிவுகளை அவர் பகிர்ந்துள்ளார். உலகம் முழுவதும் இவரை ட்விட்டரில் பின்தொடரும் ஃபாலோவர்களின் எண்ணிக்கை தற்போது ஒருகோடியே 90 லட்சமாக உயர்ந்துள்ளது.

இதன்மூலம், பாலிவுட் நடிகர்களிலேயே அதிகமான ஃபாலோவர்களை பெற்றவர் என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார். ட்விட்டரில் இவருக்கு அடுத்தபடியாக பிரபல நடிகர் ஷாருக்கான் ஒரு கோடியே 75 லட்சம் ஃபாலோவர்களுடன் இரண்டாம் இடத்திலும், அமீர்கான் ஒரு கோடியே 62 லட்சம் ஃபாலோவர்களுடன் மூன்றாம் இடத்திலும், சல்மான் கான் ஒரு கோடியே 58 லட்சம் ஃபாலோவர்களுடன் நான்காம் இடத்திலும், பாலிவுட் கதாநாயகி பிரியங்கா சோப்ரா ஒரு கோடியே 25 லட்சம் ஃபாலோவர்களுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்