முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5.2 ரிக்டர் அளவில் இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

வியாழக்கிழமை, 4 பெப்ரவரி 2016      உலகம்
Image Unavailable

ஜகர்த்தா - இந்தோனேசியாவில் கிழக்கு பகுதியில் உள்ள திமோர் தீவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவில் கிழக்கு பகுதியில் உள்ள திமோர் தீவில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள குபாங் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் குலுங்கின. அதிகாலை 4.30 மணி அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் பீதி அடைந்தனர். அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் ஓட்டம் பிடித்தனர். நிலநடுக்கம் காரணமாக வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்தன.

இதானல் ஏற்பட்ட உயிர்சேதம் மற்றும் காயம் அடைந்தவர்கள் விவரம் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே அங்கு 5.2 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. வழக்கத்துக்கு அதிகமான உயரத்தில் கடல் அலைகள் எழும்பின. இருந்தும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை. பொதுவாக இந்தோனேசியா பசிபிக் கடல் பிராந்தியததில் பூகம்ப ஆபத்து பகுதியில் உள்ளது. இதனால் இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்