முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

8 நாடுகள் பங்கேற்கும் 12-வது தெற்கு ஆசிய விளையாட்டு போட்டி: பிரதமர் மோடி துவங்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 5 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

கவுகாத்தி -  8 நாடுகளை சேர்ந்த 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் பங்கேற்கும் 12-வது தெற்கு ஆசிய விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி நேற்று துவங்கி வைத்தார். இந்த விளையாட்டு போட்டி வளத்தையும் சுற்றுலா மேம்பாட்டையும் உருவாக்கும் என்று அவர்  நம்பிக்கை தெரிவித்தார். துவக்க விழாவை யொட்டி 8நாடுகளின் வீரர்கள்-வீராங்கனைகள் அணி வகுத்து வந்தனர். தெற்கு ஆசிய விளையாட்டு பந்தயத்திற்கான கொடி ஏற்றி வைக்கப்பட்டது. தெற்கு ஆசிய விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இந்த போட்டியை இந்தியா தற்போது 3-வது முறையாக நடத்துகிறது. இந்த 12வது தெற்கு ஆசிய விளையாட்டு போட்டியை அசாமும் மேகலயாவும் கூட்டாக இணைந்து நடத்துகின்றன. தெற்கு ஆசிய விளையாட்டு போட்டி துவக்கவிழா நேற்று மாலை கவுகாத்தியில் உள்ளஇந்திரா காந்தி ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த போட்டியை முதன் முதலாக வடகிழக்கு மாநிலம் தற்போது நடத்துகிறது. இந்த போட்டி இந்த மாதம் 16-ம் தேதியன்று நிறைவடைகிறது. இந்த தெற்கு ஆசிய விளையாட்டு போட்டி ஏற்கனவே கடந்த 2012-ம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த போட்டியில் 23 விளையாட்டு பிரிவுகளில் 241 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த சார்க் விளையாட்டு அசாம் தலைநகர் கவுகாத்தியிலும் மேகாலயா தலைநகர் ஷில்லாங்கிலும் நடக்கிறது. இதில் 8 நாடுகளைச் சேர்ந்த 3ஆயிரத்து 325 வீரர், வீராங்கனைகள், அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். 12வது தெற்கு ஆசிய விளையாட்டு போட்டியை துவங்கி வைத்த பிரதமர் மோடி பேசியதாவது, இந்த விளையாட்டு போட்டி பந்தயத்தில் பங்கேற்கும் வீரர்களிடம் புதிய பிணைப்பை ஏற்படுத்தும்.

இந்த போட்டி அமைதியையும், வளத்தையும் இந்த பிராந்தியத்தில் கொண்டுவரும் 12 நாட்கள் இந்த போட்டிக்காக நீங்கள் இங்கே இருக்க போகிறீர்கள்.இந்த போட்டியின் அனுபவங்களை நீங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவில் பெற்றுச் செல்ல போகிறீர்கள். விளையாட்டு களத்தில் நம்மை எது பிரிக்கிறது என்பதை நாம் மறக்கமுடியும் நாம் ஒருவருடன் ஒருவர் உண்மையாக பாசபிணைப்புடன் இருப்போம். விளையாட்டு வீரருக்குரிய உணர்வுடன் சாதனைகளை படைக்க களம் காணுங்கள். தெற்கு ஆசிய பிராந்தியத்தில் வளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அளிக்கும் வாய்ப்பாக இந்த தெற்கு ஆசிய விளையாட்டு போட்டி இருக்கிறது.

அனைத்து தெற்கு ஆசிய நாடுகளும் நமது முன்னேற்ற பயணத்தின் கூட்டாளிகளாக உள்ளன. இந்த சர்வதேச விளையாட்டு போட்டிக்கு நீங்கள் மிக துடிப்புடனும் ஊக்கத்துடனும் வந்திருக்கிறீர்கள். விளையாட்டு வீரருக்கு உரிய பெருந்தன்மை உணர்வு வாழ்க் கையின் இதர விஷயங்களிலும் உதவும், இந்த தெற்கு ஆசிய விளையாட்டு போட்டி,இதில் பங்கேற்கும் நாடுகளின் தொழில் மற்றும் சுற்றுலா வாய்ப்புகளை அதிகரிக்கும் என நான் எதிர்பார்க்கிறேன்.  நாம் நேச உணர்வுடன் இந்த விளையாட்டு போட்டியில் பங்கேற்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்