முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ் தீவிரவாதிகளால் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ள 39 இந்தியர்கள் உயிருடன் இருக்கிறார்கள்: சுஷ்மா சுவராஜ்

திங்கட்கிழமை, 8 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

 ஐ.எஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள 39 இந்தியர்கள்  உயிருடன் பத்திரமாக உள்ளனர் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். கடந்த 2014ம்ஆண்டு  ஜூன் மாதம் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் 39 இந்தியர்களை ஈராக்கில் உள்ள மோசூல் நகரில் இருந்து  பிணைக்கைதிகளாக பிடித்தனர். அவர்கள் தீவிரவாதிகளின் பிடியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிரமப்பட்டு வருகிறார்கள். அவர்களை விடுவிக்க இந்திய அரசு அனைத்துவித முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ள இந்தியர்களின் குடும்பத்தினருடன் சுஷ்மா சுவராஜ் சந்திக்க நடவடிக் கை எடுத்தார். இது 9வது சந்திப்பு ஆகும். பாலஸ்தீனிய ஜனாதிபதி மகமூது அப்பாசுடன் சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசினார்.

அந்த சந்திப்பின் போது பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ள இந்தியர்கள் பத்திரமாக இருப்பதாகவும் அவர்கள் போரால் உருக்குலைந்த ஈராக் பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்றும்  பாலஸ்தீனிய ஜனாதிபதி தெரிவித்தார். தங்களது அரசு உளவுத்துறை தகவல்படி இந்தியர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.  கடந்த ஜனவரி மாதம் 17 மற்றும் 18ம்தேதிகளில் சுஷ்மா சுவராஜ் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு சென்றார். அவர் ஜனவரி 23ம்தேதியன்று பகரைன் நாட்டிற்கும் சென்றார். முதல் இந்திய-அரபு லீக் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் அங்கு சென்றார். இந்த கூட்டத்தில் சுஷ்மா பேசுகையில்,

கடந்த 2014ம்ஆண்டு ஜூன் மாதம் ஈராக்கில் உள்ள மோசூல் நகரில் இருந்து 39 இந்தியர்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளால் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். மேலும் 3இந்திய தொழிலாளர்கள் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் லிபியாவில்உள்ள சிதே நகரில் கடத்தப்பட்டனர். அவர்களை பத்திரமாக மீட்க அரபு நாடுகள் உதவ வேண்டும் என்று கூறினார். பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்பதில் இந்தியா மேற் கொண்டுள்ள நடவடிக் கைகளில் நாங்களும் முழு உறுதியுடன் இருப்போம் என்று அரபு நாடுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்