முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கையை பொறுத்துக் கொள்ளமுடியாது: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கையை பொறுத்துக் கொள்ளமுடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இந்தியாவிற்கு எதிராக கோஷம் எழுப்பியவர்களுக்கு எதிராக ’கடும் நடவடிக்கை’ எடுக்கப்படும், தேசத்திற்கு எதிரான நடவடிக்கையை  பொறுத்துக் கொள்ளமுடியாது என்று ராஜ்நாத் சிங் பேசிஉள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங்,
இந்தியாவிற்கு எதிரான கோஷத்தை யாராவது எழுப்பினாலும், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டு விவகாரத்தில் கேள்வி எழுப்ப முயற்சித்தாலோ, அவர்களை தப்பிஓட விடமாட்டோம். அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இந்தியாவிற்கு எதிராக கோஷம் எழுப்பியவர்களுக்கு எதிராக “கடும் நடவடிக்கையை” எடுக்க டெல்லி போலிசிடம் கேட்டுக் கொண்டு உள்ளேன் என்றும் கூறினார். கடந்த செவ்வாய் கிழமை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் கும்பலாக, இந்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இந்திய பாராளுமன்றம் தாக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளி அப்சல் குரு 2013-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டது தொடர்பாக அரசுக்கு எதிராகவும், இந்தியாவிற்கு எதிராகவும் கோஷம் எழுப்பிஉள்ளனர்.

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர், இந்த கூட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என்று புகார் அளித்ததும், பல்கலைக்கழக நிர்வாகம் கூட்டத்திற்கான அனுமதியை ரத்து செய்தது. இருப்பினும், கும்பலாக மாணவர்கள் இந்தியாவிற்கு எதிராக கோஷம் எழுப்பிஉள்ளனர். பாரதீய ஜனதா எம்.பி. கிர்ரி மற்றும் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் கொடுத்த புகாரின்படி டெல்லி போலீஸ் தேசதுரோக வழக்குப்பதிவு செய்து உள்ளது. இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, இந்திய தாயை அவமானமதிக்கும் எந்தஒரு செயலையும் பொறுத்துக் கொள்ளமுடியாது என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்