முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேக் இன் இந்தியா வாரத்தை மும்பையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 13 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

மும்பை  - மேக் இன் இந்தியா வாரத்தை மும்பையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில்  2500 சர்வதேச நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்தியாவில் பொருள்களை உற்பத்தி செய்வோம் என்ற ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது இந்தியாவில் தொழில் தொடங்கி பொருட்களை உற்பத்தி செய்ய வாருங்கள் என்று வெளிநாட்டு அரசுகளுக்கும், தொழில் அதிபர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவிலும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு பல்வேறு சலுகைகளும், வாய்ப்புகளும் அளிக்கப்படுகிறது.

இதன் மூலம் இந்தியாவில் தொழில் வளம் பெருகி வருகிறது. இந்த நிலையில் மும்பையில் மிக பிரமாண்டமான முறையில் ‘மேக் கின் இந்தியா’ வாரம் நடைபெறுகிறது. இதில், 2,500 சர்வதேச மற்றும் 8,000 உள்நாட்டு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இது தவிர 68 நாடுகளின் அரசு பிரதிநிதிகளும், 72 நாடுகளின் தொழில் குழுவினரும் கலந்து கொள்கிறார்கள். சுவீடன், பின்லாந்து, நாட்டு பிரதமர்கள், போலந்து நாட்டு துணை பிரதமர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

மத்திய மும்பையில் ஒர்லி பகுதியில் உள்ள ‘‘நேஷனல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆப் இந்தியா’’ ஆடிட்டோரியத்தில் இந்த ‘மேக் இன் இந்தியா’ வாரம் இன்று தொடங்கி 18–ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா தனது உற்பத்தி திறனை வெளிப்படுத்தி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வாய்ப்பாக கருதப்படுகிறது. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இதில் கலந்துகொண்டு மேக் இன் இந்தியா வாரத்தை தொடங்கி வைத்தார். இந்தியாவின் தொழில் நிறுவன ஜாம்பவான்களான ரத்தன் டாடா, சைரஸ் மிஸ்டிரி, முகேஷ் அம்பானி, அஜய் பைரமல், குமார் மங்கலம் பிர்லா, ஆனந்த் மகிந்திரா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

17 மாநிலங்கள் சார்பிலும் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி தொழில் வர்த்தக கண்காட்சியும், கருத்தரங்குகளும் நடைபெறுகிறது. குஜராத், மத்திய பிரதேசம், அரியானா, ஒடிசா, பஞ்சாப், மாநில அரசுகள் நேரடியாக இதில் பங்கேற்கின்றன. இந்த 7 நாட்களிலும் வெளிநாடுகளுடனான 3,000 தொழில் நிறுவன கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி தொழில் அதிபர்களுடன் கலந்து உரையாடல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்