முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் யாத்திரைக்கு ஒரு லட்சம் பேர் முன்பதிவு

சனிக்கிழமை, 9 ஏப்ரல் 2016      ஆன்மிகம்
Image Unavailable

ஸ்ரீநகர் - அமர்நாத் யாத்திரைக்காக இந்த ஆண்டில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான யாத்ரீகர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளதாக அமர்நாத் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான 48 நாள் அமர்நாத் யாத்திரை வரும் ஜூலை இரண்டாம் தேதி தொடங்குகின்றது. ரக்‌ஷாபந்தன் தினமான ஆகஸ்ட் 18-ம் தேதி முடிவடைகிறது. 60-வது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இந்த யாத்திரையில் பல்டல் மற்றும் மலைப்பாதை வழியாக தினந்தோறும் 7,500 யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி, ஜம்மு-காஷ்மீர் வங்கி மற்றும் எஸ் வங்கி உள்ளிட்ட அரசுத்துறை வங்கிகளின் மூலமாக அமர்நாத் யாத்திரைக்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்றுவரும் நிலையில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அமர்நாத் யாத்திரைக்காக முன்பதிவு செய்துள்ளதாக அமர்நாத் ஆலய தலைமை செயல் அதிகாரி திரிபாதி தெரிவித்துள்ளார். பல லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் குவிய உள்ளதால் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இந்த மலையடிவாரத்தில் உள்ள ஆறு முகாம்களில் செய்யப்பட்டுள்ளது.

உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பத்ற்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. இங்குள்ள ஐந்து முகாம்களின் அருகாமையில் தற்காலிக மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து முகாம்களிலும் தொலைபேசி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கழிப்பறைகள், குளியல் அறைகள், பொது சமையல் கூடங்கள் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. யாத்ரீகர்களின் சுமைகளை ஏற்றிச் செல்ல ஆயிரக்கணக்கான கழுதைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்