முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவில் டாய்லெட் பேப்பரில் இடம்பெற்ற ஒபாமாவின் போட்டோவால் சர்ச்சை

திங்கட்கிழமை, 18 ஏப்ரல் 2016      உலகம்
Image Unavailable

மாஸ்கோ  - ரஷ்யாவில் உள்ள ஹோட்டல் ஒன்றின் கழிவறையில் ‘டாய்லெட் பேப்பரில்' அமெரிக்க அதிபர் ஒபாமாவின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா தலைநகரான மாஸ்கோவில் இருந்து சுமார் 4,000 மைல்கள் தொலைவில் உள்ளது கரஸ்னோயார்க்ஸ் நகரம். இங்கு கடந்த மாதம் பிரசிடெண்ட் பேக் என்ற ஹோட்டல் திறக்கப்பட்டது. இதன் சிறப்பம்சமே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பெருமைப்படுத்தும் வகையில், அந்த ஹோட்டல் முழுவதும் வைக்கப்பட்டுள்ள அவரது புகைப்படங்கள் தான்.

ஹோட்டலின் வரவேற்பறையில் புதினின் குழந்தைப் பருவம் முதல் அவர் ஜனாதிபதியாக பதவி ஏற்றது வரையிலான பல்வேறு புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. கூடவே, புதினின் மெழுகுச்சிலையும் அங்கு வைக்கப்பட்டுள்ளது. உணவகத்திற்கு வருபவர்கள் அதன் அருகில் நின்று விரும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதாக ஹோட்டல் நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

ஆனால் இந்த ஹோட்டலில் அமெரிக்காவை அவமானப்படுத்தும் வகையில் செய்த செயல் தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆம், இந்த ஹோட்டலின் கழிப்பறையில் தரையில் விரிக்கப்பட்டுள்ள விரிப்பு அமெரிக்க கொடியின் அமைப்பில் உள்ளது. கூடவே, அங்கு வைக்கப்பட்டுள்ள டாய்லெட் பேப்பரில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்