முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலை நிறுத்தத்தால் 800க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

புதன்கிழமை, 27 ஏப்ரல் 2016      உலகம்
Image Unavailable

பெர்லின்  -  ஜெர்மனியில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் 800க்கும் மேற்பட்டவிமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. ஜெர்மனியின் 8நகரங்களில் அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். இந்த வேலை நிறுத்தத்தால் பிராங்க்பர்ட் நகர விமான நிலையத்தில்  400 விமான சேவை ரத்து செய்யப்பட்டன. விமான நிலைய தீயணைப்பு வீரர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வெளியேறினார்கள். பொதுத்துறை ஊழியர்களும் பணி செய்யாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.பாதுகாப்பு ஊழியர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டார்கள்.

மூனீச், கோலக்னி, டசல்டர்ப், ஹனோவர், பிரமென், பெர்லின் , ஹம்பர்க் நகரங்களிலும் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. ஜெர்மனியில்  20 லட்சம் ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தத்தை நேற்றுதொடங்கினர். இந்த வேலை நிறுத்த போராட்டம் இன்றும் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த வேலை நிறுத்தம் தேவையற்றது. உரியமுறையிலும் நடத்தப்படவில்லை என ஜெர்மனி உள்துறை அமைச்சர் தாமஸ் டி மெய்சரே தெரிவித்தார்.  அரசு ஊழியர்களுக்கு அரசு  3சதவீத சம்பள உயர்வும் இதர சலுகைகளையும் அறிவித்துள்ள நிலையில் இந்த வேலை நிறுத்தத்தை ஊழியர்கள் மேற்கொண்டு இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்