முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 வது கட்ட தேர்தல் : மேற்கு வங்காளத்தில் இன்று 53 தொகுதிகளில் வாக்குபதிவு

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2016      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா  - மேற்கு வங்காளத்தில் 5-வது கட்டமாக 53 தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது.  மேற்கு வங்காளத்தில் உள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு 6 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 185 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. 5-வது கட்டமாக இன்று 53 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா பவானிப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கும் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதைத்தொடர்ந்து பவானிப்பூர் உள்பட 53 தொகுதிகளில் நேற்று முன்தினம் மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பேரணியில் முதல்வர் மம்தா பானர்ஜி தொண்டர்கள் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்கள்.

இன்று வாக்குபதிவு நடைபெறும் 53 தொகுதிகளிலும் அனைத்து வாக்குசாவடிகளிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உள்ளூர் போலீசாருடன் மத்திய போலீஸ் படையும் குவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும் மாவட்டங்களின் எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்டுகள் நடமாட்டமும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்