முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசுக்கு எதிரான போராட்டம்: ஈராக் பாராளுமன்றம் சூறை

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2016      உலகம்
Image Unavailable

பாக்தாத் : அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈராக் பாராளுமன்றம் சூறையாடப்பட்டுள்ளது. ஈராக்கில் பிரதமர் ஹைதர் அல் அபாதியின் அரசுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 5 புதிய மந்திரிகள் நியமிக்கப்பட்டனர். அதற்கு பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டும். ஆனால் பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெற முடியாத நிலை அங்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நஜாப் நகரில் ஷியா பிரிவு மதத்தலைவர் மாக்தாதா அல் சதார் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர், அரசியல் முட்டுக்கட்டைக்கு கண்டனம் தெரிவித்தார். அடுத்த சில நிமிடங்களில் பாக்தாத் நகரில் அவரது ஆதரவாளர்கள்  ஆயிரக்கணக்கானோர் ஆவேசமாக திரண்டனர். அவர்கள் உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ள பசுமை பிரதேசத்தில் அமைந்துள்ள பாராளுமன்றத்துக்குள் நுழைந்தனர். கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டிருந்ததால் எம்.பி.க்கள் யாருமில்லாத நிலையில், அங்கிருந்த நாற்காலி, மேஜை, விளக்குகளை அடித்து நொறுக்கினர். பாராளுமன்றத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்தை தீயிட்டு கொளுத்தினர். பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. அவர்கள் அங்கேயே முகாமிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்