முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணிக்கு இரண்டாவது இடம்

செவ்வாய்க்கிழமை, 3 மே 2016      விளையாட்டு
Image Unavailable

துபாய் : டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா அணி முதலிடத்தில் உள்ளது.

2015-16 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது. அதில், ஆஸ்திரேலியா அணி 118 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி 32 போட்டிகளில் விளையாடியுள்ளது. ஒரு நாள் போட்டிக்கான அணியிலும் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது.

20 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 112 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. டி-20 போட்டிகளில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவிற்கு அடுத்தப்படியாக பாகிஸ்தான் (111 புள்ளிகள்), இங்கிலாந்து (105 புள்ளிகள்), நியூசிலாந்து (98 புள்ளிகள்) அணிகள் முறையே 3-வது, 4-வது மற்றும் 5-வது இடங்களை பிடித்துள்ளன.

தென் ஆப்பிரிக்க அணி 92 புள்ளிகளுடன் மூன்று இடங்கள் பின்தங்கி தற்போது 6-வது இடத்தில் உள்ளது. இலங்கை அணி 88 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்