முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி டிகிரி பட்டம் குறித்து டெல்லி பல்கலை துணைவேந்தருக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடிதம்

வியாழக்கிழமை, 5 மே 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி -  பிரதமர் மோடி டிகிரி பட்டம் குறித்து டெல்லி பல்கலைக்கழக துணை வேந்தருக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதினார். பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் பிரதமர் மோடியின் டிகிரி பட்டம் பெற்ற விவரமும் வெளியிடப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.  டெல்லி பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி டிகிரி பட்டம் பெற்றார் என்று கூறப்பட்டிருந்தது. இது குறித்து அந்த பல்கலைக்கழகம் உண்மை தகவலை வெளியிட வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி இருந்தார். 

இந்த நிலையில் டெல்லி பல்கலைக்கழக துணை வேந்தர் யோகேஷ் தியாகிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கடிதம் எழுதினார். இந்த கடிதத்தில் மோடியின் டிகிரி பட்டம் குறித்து அந்த பல்கலைக்கழகம் உண்மை விவரங்களை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார். கெஜ்ரிவால் எழுதிய கடிதத்தில் மோடி உண்மையிலேயே டெல்லி பல்கலைக்கழகத்தில் டிகிரி பெற்றாரா அல்லது இல்லையா-? பல்கலைக்கழக ஆவணப்படி மோடி டிகிரிக்கான விண்ணப்பம் பெற்ற விவரம் ஏதும் இல்லை. 

அவர் பி.ஏ. பட்டம் பெறாத நிலையில் எம்.ஏ.படிப்பை எப்படி தொடர முடியும்? இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவரது எம்.ஏ.பட்டமும் போலியானது என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.  மோடி டிகிரி பட்ட விவரத்தை பெறமுடியவில்லை. இதில்ஒரு விபத்து ஏற்படலாம். என ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி மூலம் விபத்து ஏற்படுவதற்கான சூழல் ஏற்படுத்தப்படுகிறதா என்கிற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. பிரதமரின் கல்வி தகுதி குறித்து அறிவதற்கு நாட்டு மக்களுக்கு உரிமை உள்ளது. மோடியின் கல்வி தகுதி குறித்து, தீவிரமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அதுபற்றிய உண்மை தெரிய வேண்டும் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்